ஊழல், மோசமான நிர்வாகத்திலிருந்து பஞ்சாப்பை ஆம் ஆத்மி மீட்கும்! - ஹர்பால்சிங் சீமா

 

ஹர்பால்சிங் சீமா





ஹர்பால் சிங் சீமா

ஆம் ஆத்மி தலைவர், பஞ்சாப்

சிரோமணி அகாலிதளம் கட்சி, இத்தேர்தல் சிரோமணி அகாலிதளம், ஆம் ஆத்மிக்கு இடையில்தான் நடக்கிறது என கூறியிருக்கிறது. காங்கிரசிடமிருந்து பதினைந்து சீட்டுகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

காங்கிரஸ், சிரோமணி என இரண்டு கட்சிகளும் பதினைந்து இடங்களை பிடிக்கும் என நினைக்கிறேன். முழு கிராமங்களுமே ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்கும். இதற்கு காரணம், மோசமான நிர்வாகம், ஊழல்தான். மக்கள், அகாலி, காங்கிரஸ கட்சியினரின் மோசமான ஊழல்களை பார்த்துவிட்டார்கள். மக்கள் ஆம் ஆத்மியைத் தேர்ந்தெடுக்க தயாராகிவிட்டார்கள். 

ஆனால் ஆம் ஆத்மி என்பது டெல்லியைச் சேர்ந்த கட்சிதானே? அது பஞ்சாப்பைச் சேர்ந்தது அல்லவே?

இது தவறானது. நான் அகாலி கட்சியினரைக் கேட்கிறேன். அவர்களது கூட்டணி கட்சி எங்கிருந்து வந்தார்கள்? பாஜகவின் தலைமையகம் கூட டெல்லிதானே? ஆம் ஆத்மியின் தலைமையகம் டெல்லியில் இருப்பதில் என்ன பிரச்னை? ஆம் ஆத்மி என்பது தேசிய கட்சி. அதன் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் முதல்வராக இருக்கிறார். நாங்கள் வெளிநபர் என எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது உண்மையல்ல. 

ஆம் ஆத்மியின் திட்டம் என்ன?

எங்களது திட்டமே மக்களுக்கான அரசுதான். கல்வி அமைப்பை வலிமையாக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் இதற்கான திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பஞ்சாப்பில் வேலையின்மை பிரச்னை உள்ளது. அதனைத் தீர்த்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். வேலைவாய்ப்பிற்காக மக்கள் பஞ்சாப்பிற்கு வரவேண்டும். ஊழல் இல்லாத மாநிலமாக பஞ்சாப் உருவாக வேண்டும். நாங்கள் நிர்வாகத்தை மாற்றி சட்ட ஒழுங்கு கொண்ட மாநிலமாக பஞ்சாப்பை மாற்றுவோம். 

சட்டம் ஒழுங்கு பற்றி பேசினீர்கள். இங்கு நெடுங்காலமாக இருக்கும் போதை பழக்கம் பற்றி சொல்லுங்கள். 

காங்கிரஸ் அரசு, இங்குள்ள மக்களுக்கு போதைப்பொருட்கள் விவகாரத்தில் நேர்மையாக நடந்துகொள்ளவில்லை. அவர்கள் பஞ்சாப்பை பஞ்சாபியர்களை மதிக்கவில்லை. இதன் காரணமாகவே அவர்கள் சார்பில் நிற்கும் வேட்பாளர்கள் டெபாசிட்டை இழப்பார்கள். மக்களின் கோபத்தை ஊடகங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை. 

பகவந்த் மன் என்பவரை முதல்வர் வேட்பாளராக கூறியிருக்கிறீர்கள். இது விமர்சிக்கப்பட்டதே?

இது உண்மையல்ல. ஜனநாயக முறைப்படி தான் அவரை கட்சி தேர்ந்தெடுத்தது. நாங்கள் தொலைபேசி எண்ணைக் கொடுத்து அவர்களை தேர்ந்தெடுக்க கூறினோம். எல்லோரும் தேர்ந்தெடுத்த வேட்பாளர் பகவந்த் மன். எங்களது எதிர்க்கட்சியினர், இந்தளவு வெளிப்படையாக நேர்மையாக நடந்துகொண்டார்களா என்றால் இல்லை. சிரோமணி, காங்கிரஸ் ஆகியோர் முதல்வர் வேட்பாளரை கூறாமலேயேதான் தேர்தலை சந்திக்கிறார்கள். 

ஃபிரன்ட்லைன்

25.2.2022

ஜியா அஸ் சலாம்


கருத்துகள்