அனிமேஷன் உலகம் - சுதந்திரமாக இயங்கும் உலகில் சாதிக்கும் இயக்குநர்கள்
லவ்விங் வின்சென்ட் |
இயக்குநர்கள் வெல்ச்மேன் - கோபியலா |
டேஷ் ஷா தனது திரைப்படத்திற்கு ஒரு சிறிய காட்சிக்கு தேவையான நடிகரை தேடிக்கொண்டிருந்தார். இவர் அமெரிக்காவில் வசிப்பவர். கிராபிக் நாவலை எழுதுபவர் இப்போது திரைப்படங்களை எடுத்து வருகிறார். சிறிய காட்சிக்கான நடிப்பை இவரது நட்பு வட்டத்தில் உள்ள ராஜ் என்பவரே கொடுத்திருக்கிறார்.
ராஜின் முழுப்பெயர், ராஜேஷ் பரமேஷ்வரன். இவர் இந்திய அமெரிக்க எழுத்தாளர். சென்னையை பூர்விகமாக கொண்டவர், ஐ யம் எக்சிகியூஸ்னர் என்ற நூலை எழுதியிருக்கிறார். ஷாவின் படம் 34 ஆவது டோக்கியோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருக்கிறது.
ஷா தனது படங்களுக்கு தேவையான நடிகர்களை அதற்கென உள்ள நடிப்பு குழுக்கள், நண்பர்கள் வட்டாரம் ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுத்து வருகிறார். இன்று எடுக்கும் பல்வேறு அனிமேஷன் படங்கள் அனைத்துமே தொழில்நுட்ப வளர்ச்சியால் சிறப்பாக உருவாக்கப்பட்டு வருகின்றன. தனி உலகமாக சிறந்த முறையில் சுதந்திரமாக செயல்படுகிறது என்பது முக்கியமானது.
பாம்பே ரோஸ், லவ்விங் வின்சென்ட் போன்ற கடுமையான உழைப்பை கோரும் படங்கள் முதல் டிஸ்னியால் எடுக்கப்படும் டாய் ஸ்டோரி, இன்சைட் அவுட் ஆகிய படங்கள் வரை சிறப்பான கதை அம்சங்களையும் தொழில்நுட்பத்தையும் கொண்டு எடுக்கப்படுகின்றன. அனிமேஷன் உலகிலும் இவை முக்கியத்துவம் பெற்று வருகின்றன.
இயக்குநர் டேஷ் ஷா |
2017இல் ஷா எடுத்த படம் மை என்டையர் ஹை ஸ்கூல் சின்கிங் இன்டு தி சீ. இதில் பல்வேறு புனைவான பாத்திரங்களை உருவாக்கி பயன்படுத்தியிருந்தார். அதன் பெயர், கிரைப்டிட்ஸ். நாங்கள் குறிப்பிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பிரேம் ரேட்டைக் குறைத்து கதையை முக்கியத்துவப்படுத்துகிறோம் என்றார். இவரது திரைப்படம் சன்டேன்ஸ் திரைப்பட விழாவில் பாராட்டப்பட்டதோடு கண்டுபிடிப்பாளர் என்ற விருதையும் பெற்றார். கிரிப்டோஜூ என்ற படத்திற்கு சிறப்பு அங்கீகார விருதையும் பெற்றார்.
கிரைப்டிட்ஸ் என்பதற்கான ஆதாரங்களை 1800களில் வாழ்ந்த கலைஞர் கோஹூசாய் என்பவரிடமிருந்து பெற்றுள்ளனர். ஷாவின் படத்திற்கு அனிமேஷன் செய்வது ஜேன் சம்போர்ஸ்கி என்ற பெண்மணி. இவர், ஷாவின் மனைவி.
டேஷ் ஷாவுடன் அனிமேஷன் இயக்குநர் ஜேன் சம்போர்ஸ்கி |
லவ்விங் வின்சென்ட் படத்தை உருவாக்கியவர்கள் ஹியூ வெல்ச்மென், டோரடா கோபிலா ஆகியோர்தான். இவர்கள் 65 ஆயிரம் ஓவியங்களை உருவாக்கி படத்திற்கு பயன்படுத்தினர். இதற்காகவே 125 ஓவியர்கள் பணிபுரிந்திருக்கிறார்கள். இதில் இருவர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
வெல்ச்மென் இதைப்பற்றி கூறும் கருத்து வேறுவிதமாக இருக்கிறது.
இன்று பெரும்பாலும் அனிமேஷனை கணினியில் தான் செய்கிறார்கள். ஆனால், அதனை மனிதர்கள் தங்கள் கையில் செய்யும்போது தனி அழகாக இருக்கும். மனிதர்களால் மனிதர்களின் உணர்ச்சிகளோடு ஓவியங்கள் உருவாகிறது. இதுதான் எங்கள் படத்தின் விசேஷம் என்றார் வெல்ச்மென்.
இத்தனைக்கும் சிஜி, விசுவல் எஃபெக்ட்ஸ் ஆகியவற்றின் பெரும் ரசிகராக இருக்கிறார். தொடர்ச்சியாக வேறு வடிவங்களில் திரைப்படமாக்கலை செய்து வருகிறார். கையில் செய்த ஒவியங்களுக்கான மதிப்பு தனி என புரிந்துகொண்டு பேசுகிறார்.
தற்போது இவரும் கோபியலா என இருவரும் சேர்ந்து, தி பீஸன்ட்ஸ் என்ற படத்தை எடுத்து வருகிறார்கள். இதுவும் கைகளால் வரைந்த ஓவியங்களைக் கொண்டது. நோபல் பரிசு வென்ற போலந்து எழுத்தாளரான வியாடிஸ்லா ரேமண்ட் என்ற எழுத்தாளரின் நாவல் இது. நவீன தொழில்நுட்பத்தை வைத்து பத்தாயிரம் ஆண்டு கால விவசாயிகளின் வாழ்க்கை அனிமேஷனில் உருவாக்கும் முயற்சி இது.
கலாசாரம், உணவு, உறவு ஆகியவற்றைப் பொறுத்து விவசாயிகளின் வாழ்க்கை அமைகிறது. இன்றுவரையும் கூட அவர்களின் வாழ்க்கை மாற்றமுடியாதபடி பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டபடி வலி நிரம்பியதாகவே இருக்கிறது என சொல்லுகிறார் வெல்ச்மேன். இது லவ்விங் வின்சென்ட் படத்தை விட பெரியது.
கருத்துகள்
கருத்துரையிடுக