எகிப்து சுதந்திரமான தன்னாட்சி நாடாக அறிவிக்கப்பட்டு 100 ஆண்டு! - எகிப்து

 











எகிப்து

தொன்மையான காலங்களில் எகிப்து நிறைய முன்னேற்றங்களைப் பெற்றிருந்தது. அதாவது, குடிமைச்சமூகமாக முன்னேறியிருந்தது. தகவல் தொடர்பு, வேளாண்மை, நகரம், மதம், அரசு நிர்வாகம் என அனைத்தையுமே சொல்லலாம். 

கிரேக்கர்கள், ரோமன்ஸ், பைஸான்டியர்கள், ஓட்டமான் என பலரின் கையில் எகிப்து சென்று வந்தபிறகுதான் அதற்கு விடுதலை கிடைத்தது.  1805ஆம் ஆண்டு ஒட்டமான் தலைவர் முகமது அலி, எகிப்தின் வைஸ்ராயாக இருந்தார். இவர்தான் ஒட்டமான் அரசின் மன்னர் சார்பாக எகிப்தை ஆட்சி செய்தார். 

1882ஆம் ஆண்டு எகிப்தை ஆங்கிலேயர் கைப்பற்றினர். இதற்கு காரணமாக அமைந்ததுதான் ஆங்கிலோ எகிப்திய போர். ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தை வெய்ல்டு புரோடெக்டரேட் என்று அழைக்கிறார்கள். அதாவது சட்டரீதியான ஆட்சி செய்யவில்லை என்று பொருளைப் புரிந்துகொள்ளலாம். 

1914ஆம் ஆண்டு ஒட்டமான் அரசர், முதல் உலகப்போரில் கலந்துகொண்டார். அதில் அதிகாரத்தின் பக்கம் நின்று போரிட்டார்.  பிறகுதான் ஆங்கிலேயர்கள், எகிப்தை சுதந்திர நாடாக அறிவித்தனர்.  1922ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று எகிப்துக்கு சுதந்திரம் அறிவிக்கப்பட்டது. இதனால், ஒட்டமான் அரசின் அதிகாரம் அங்கே இல்லாமல் ஆனது. இரண்டாம் உலகப்போரின்போது எகிப்து லிபியாவிலிருந்து வந்த படைகளால் தாக்கப்பட்டது. போருக்குப் பிறகு 1951இல் ஆங்கிலேயர்களுக்கு எதிரான அரசு அங்கே அமைந்தது. 

1956ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு சூயஸ் கால்வாய் தொடர்பாக எகிப்து மீது போர் தொடுத்தது. ஆனால் உலக நாடுகளின் ஆதரவு கிடைக்காத காரணத்தால் ஆங்கில அரசு தனது படைகள் எகிப்திலிருந்து விலகிக்கொண்டது. 2022ஆம் ஆண்டு தான், எகிப்து 1922ஆம் ஆண்டு முழுமையான சுதந்திரம் பெற்றதற்கான நூற்றாண்டு. 

டெல் மீ வொய் இதழ்





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்