வித்தியாசமாக கட்டப்பட்ட டோக்கியோ கேப்சூல் டவர்!

 









வினோதமான டோக்கியோ டவர் கட்டடம்!

இந்த கட்டடத்தை முதலில் பார்ப்பவர்கள், தேவையில்லாமல் இருக்கும் கான்க்ரீட் கற்களை வரிசையாக அடுக்கி வைத்திருப்பார்கள் என்றே நினைப்பார்கள். கின்சா மாவட்டத்திலுள்ள டோக்கியோவில்  கேப்சூல் டவர் அமைக்கப்பட்டுள்ளது. 

இதனை  1972ஆம் ஆண்டு கிஷோ குரோகாவா என்ற புகழ்பெற்ற கட்டடக் கலைஞர் உருவாக்கினார். நகரில் வேலை பார்ப்பவர்கள் வார இறுதிக்கு புறநகருக்கு அவசரமாக கிளம்புவதைத் தடுக்கும் வகையில் இந்த கட்டட அமைப்பை உருவாக்கினார். பார்க்க பெட்டி மாதிரி இருந்தாலும் இதில் பலர் தங்கலாம். ஒரு பெட்டியில் ஒருவர் என தங்கலாம். உலகப்போருக்கு கட்டப்பட்ட கட்டுமானது இது. ஒவ்வொரு கேப்சூலிலும் குளியலறை, டிவி, ரேடி, போன் ஆகியவை வைப்பதற்கான இடம் இருக்கும். கூடவே நகரை உள்ளிருந்து வெளியே பார்ப்பதற்கான ஜன்னலும் உண்டு. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் கேப்சூல் கட்டுமானம் மெல்ல சிதைவடைந்து வருகிறது. 

இப்போது இங்கே தங்கி கேப்சூலை அலுவலகமாக வீடாக பயன்படுத்தி வருபவர்களுக்கும் நிலைமை புரிந்துவிட்டது. அடுத்த ஆண்டு இந்த கேப்சூல்கள் அழிக்கப்படும் என தெரிகிறது. ”நாங்கள் இந்த கட்டட ஐடியாவை பாதுகாக்க நினைக்கிறோம்” என்றார் இதனை நிர்வாகம் செய்துவரும் டட்சுயுகி மேடா. இவர் பதிமூன்று மாடியிலுள்ள கட்டடத்தில் பதினைந்து அறைகளை வாங்கி அதனை வாடகைக்கும் சுற்றுலாவுக்கும் அனுமதித்து வருகிறார். 

கேப்சூல் அறைகளில் நீர் பிரச்னை இருப்பதோடு அரசின் நிலநடுக்க விதிகளுக்கும் ஏற்றவாறு இல்லை. எனவே இங்குள்ள மக்கள் மெல்ல அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். இதனைக்  காப்பாற்ற முடியாத நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலுள்ள அருங்காட்சியகங்களிடம் உதவி கேட்டு வருகிறார்கள். உதவி கிடைத்தால் கட்டுமானங்கள் உடைக்கப்படாமல் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது. காலம்தான் கருணை காட்ட வேண்டும். 


தகவல்

out of time ?

future of decaying tokyo tower up in the air

the guardian weekly 19.11.2021(justin mccurry)


கருத்துகள்