ஊக்கமளிக்கும் இசைக்கலைஞர்கள்- ஜூபின் நாட்டியால், சந்தோஷ் நாராயணன், மெஹ்தாப் அலி நியாசி

 






பாடகர் ஜூபின் நாட்டியால்




அசல் குரல்!

ஜூபின் நாட்டியால்

பாடகர், சுயாதீன இசைக்கலைஞர்

தொடக்கத்தில் இவரது குரலைக் கேட்ட ஏஆர்ஆர், உனது குரல் தனித்துவமாக இருக்கிறது என்று சொல்லி ஊக்கப்படுத்தியிருக்கிறார். டேராடூனிலிருந்து ஜூபின் மும்பைக்கு வர அதுவே காரணம். பிறகுதான், அவரை எக்ஸ் ஃபேக்டர் எனும் நிகழ்ச்சி தேர்வில் சோனு நிகாம் தகுதியில்லை என நீக்கினார். பிறகுதான், சில வேலைகள் செய்து கிடைத்த பணத்தை வைத்து வாரணாசி முதல் சென்னை வரை அலைந்து திரிந்தார். இதற்கிடையில் டெமோ பாடகராக 250 பாடல்களை பாடினார். இவரது முதல் பாடல் ஏக் முலாகத். 

நான் என்னுடைய வரம்புகளை தெரிந்துகொண்டபோது நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அரசியல் என்னை கீழே தள்ளியபோது சிரித்துக்கொண்டே நான் அங்கிருந்து விலகிவிடுவேன் என்கிறார். காபில் ஹூன், தி ஹம்மா, தும் ஹி ஆனா என நிறைய பாடல்களை பாடியுள்ளார். கடந்த ஆண்டு இவர் பாடிய இரு பாடல்கள் பலராலும் விரும்பி கேட்கப்பட்டது. லுட் காயே, ராடான் லம்பியான் என்ற இருபாடல்களை நீங்களும் கேட்டிருக்கலாம்.  

பாடலுக்கு ஒரு முகத்தை கொடுப்பது என்பது இசையில் கடினமானது என்றார் ஜூபின். திரையிசையோடு சுயாதீன இசைப் பாடல்களையும் பறந்து பறந்து பாடிவருகிறார். 

உத்தர்காண்டின் கார்வால் பகுதியில் பல்வேறு இடங்களுக்கு மலையேற்றம் செல்வதுதான் ஜூபினுக்கு பிடித்த வேலை. 




சிதார் கலைஞர் மெஹ்தாப் அலி நியாசி




மெஹ்தாப் அலி நியாசி

சிதார் கலைஞர்

டெல்லியைச் சேர்ந்த சிதார் கலைஞர். உஸ்தாத் அல்லா ரக்கா கானின் நினைவைப் போற்றும் குரு பூர்ணியா நிகழ்ச்சியில் நியாசி சிதார் இசைத்தார். 2018இல் நடந்த நிகழ்ச்சி அது. இதில்இவரின் திறமையைப் பார்த்த தபேலா கலைஞர் ஜாகிர் உசேன், மனமுவந்து பாராட்டினார். மேலும் நீ புதிய பாதையை அமைத்துள்ளார் எனவும் கூறினார். 

நியாசின் தாத்தா,அப்பா ஆகிய இருவருமே இசைக்கலைஞர்கள்தான். சிறுவயதில் சந்தூர் இசைக்க கற்றார். பிறகுதான் அதனை பனிரெண்டு வயதில் மேடையேறி வாசித்து பாராட்டுகளைப் பெற்றார்.  எனக்கு வேறு வழியில்லை.நான் ஆறு தலைமுறையாக பெறும் இசையை அதன் பெருமையை  தூக்கிச் சுமந்து வருகிறேன் என்றார் நியாசி. 

இசைக்குறிப்புகளை வாசிப்பதும். கருவிகளை பயன்படுத்துவதும் ஆற்றல் வாய்ந்த தன்மையாக நியாசியிடம் உள்ளது. இப்போதும் தினசரி ஐந்து மணிநேரம் சிதார் பயிற்சி செய்கிறார். இவருக்கு குரு, சாஜன் மிஸ்ரா. பாடலையும் சொல்லித்தருகிறார். கஜல் பாடகர்கள், ஜாஸ் இசைக்கலைஞர்கள் ஆகியோருடன் சேர்ந்து இசை நிகழ்ச்சிகளை செய்கிறார். 




இசைக்கலைஞர் சந்தோஷ் நாராயணன்





சந்தோஷ் நாராயணன்

இசையமைப்பாளர், பாடகர்

2012இல் தான் பா ரஞ்சித்தின் அட்டக்கத்தி படம் மூலமாக  தனது திரையிசை பயணத்தைத் தொடங்கினார். பாடலும் வெற்றி பெற்றதோடு அதனை இயக்கிவருக்கும் முக்கியமான தடத்தை அமைத்துக் கொடுத்தது. 

கானா, காதல் பாடல் என இரண்டிலுமே தனித்துவமான இசையை சந்தோஷ் நாராயணன் வழங்கிவருகிறார். பா ரஞ்சித் மூலம் சென்னைக்கான பாடல்களை கொடுக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் மூலம் மதுரையின் மணம் வீசும் பாடல்கள் வெளி வருகின்றன. மாரி செல்வராஜின் படங்களில் திருநெல்வேலியை நீங்கள் உணருவீர்கள். மாற்றங்களை செய்யும் படங்களை உருவாக்கும் இயக்குநர்களுக்கு சந்தோஷ் நாராயணன் ஊக்கமளிக்கிறார். அவர்களது கலைப் பார்வையை உள்வாங்கி இசை மூலம் வேறு தளங்களுக்கு கொண்டு செல்கிறார். 

இந்தியா டுடே 





கருத்துகள்