பறவைகள் வாசனையை வைத்துதான் உணவு தேடுகிறதா? - அறிவியல் நூல்கள் அறிமுகம்

 














சீக்ரெட் பர்ஃஃப்யூம் ஆப் பேர்ட்ஸ்

டேனியல்லா ஜே வொய்டேகர்

ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்

2022

பெரும்பாலான பறவை ஆராய்ச்சியாளர்கள் பறவைகளுக்கு சுவாசிக்கும் திறன் இல்லை என்று கூறுவார்கள். ஆனால் டேனியல்லா தனது ஆராய்ச்சி வழியாக பறவைகளுக்கு வாசனை அறியும் திறன் உண்டு என்று சொல்கிறார். மேலும், உணவுகளை கண்டுபிடிக்கவும், இணை சேரவும் கூட வாசனைகளை பயன்படுத்துவாக சொல்லுகிறார். எனவே ஆர்வம் இருப்பவர்கள் நூலை வாங்கி வாசியுங்கள். 

அனிமல் ரிசொல்யூஷன்

ரோன் புரோக்லியோ

மின்னசோட்டா பல்கலைக்கழகம்

2022

இதில் ஆங்கில பேராசிரியர் ரோன், விலங்குகளின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி கட்டுரைகளாக எழுதியுள்ளார். 













ஜர்னி ஆப் தி மைண்ட் 

ஹவ் திங்கிங் எமர்ஜெட் ஃப்ரம் சாவோஸ் 

ஆகி ஆகாஸ், சாய் கட்டாம்

எப்போதும் நமது மூளையில் நடைபெறும் நிகழ்ச்சிகள், நியூரான்கள் பற்றிய சந்தேகங்கள் நமக்கு உண்டு. இந்த நூலில் பிரக்ஞை பற்றிய கேள்விகளை கேட்டு அதற்கான பதில்களை அறியத் தருகிறார்கள். தவளை, மனிதன், குரங்கு ஆகியவற்றின் மூளைகளை படமாக வரைந்து விளக்கியிருக்கிறார்கள். 









தி கைஜூ பிரசர்வேஷன் சொசைட்டி

ஜான் ஸ்கால்ஸி 

2022

இது ஒரு நாவல். நாவலுக்கு முன்னாடி அறிவியல் என்று போட்டு வாசியுங்கள். தொண்ணூறுகளில் வந்த மைக்கேல் கிரிக்டோனின் அறிவியல் நாவல்களை சற்று நகைச்சுவை கலந்து வாசிப்பதை இந்த நாவல் சாத்தியப்படுத்துகிறது.  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உணவு டெலிவரி செய்துகொண்டிருக்கும் ஜேமி கிரே என்பவர்தான் நாயகன். அவர் க்ரீன்லாந்தில் உள்ள வினோதமான மிருகங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் பங்கெடுக்கிறார். இதில் பெரும் மலைக்குன்று அளவில் விலங்குகளை வளர்த்து ஆராய்ச்சி செய்கிறார்கள். ஏறத்தாழ ஜப்பானுக்கு நகர்ந்து சென்றது போல இருக்கிறதா நாவல் படிப்பவர்களுக்கும் அப்படித்தான் இருக்கும். 

சயின்டிபிக் அமெரிக்கன்

மார்ச் 2022










கருத்துகள்

பிரபலமான இடுகைகள்