சர்ச்சையான விஷயங்களை கலந்து பேசுவோம் வாங்க! - வீனா பாட்காஸ்ட்

 








வீனா பாட்காஸ்ட் 



வீனா பாட்காஸ்டைக் கேட்கும்போது தோன்றுவது, இரண்டு நெருங்கிய நண்பர்கள் தங்களுக்குள், தங்களுக்கு தெரிந்த விஷயங்களை ஜாலியாக பேசிக்கொள்ளும் முறைதான். அதில் ஒருவர் என்ன பெறுகிறார் என்பது கேட்பவரின் விருப்பம் சார்ந்தது. 

வீனா பாட்காஸ்ட் ஐடியா சென்னையில் ஐடி வேலை பார்க்கும் வினுஷ்குமாரின் மூளையில்தான் உதித்திருக்கிறது. இவரும் இவரது நண்பரான நவீனும் போனிலேயே ஏராளமான விஷயங்களை பேசி தீர்த்திருக்கிறார்கள். இப்படி பேசுவதை நாம் ஏன் பாட்காஸ்ட் வழியாக செய்யக்கூடாது என யோசித்து 2020 இல் தொடங்கியதுதான் வீனா பாட்காஸ்ட். 



பொதுவாக, பொது இடங்களில் சில விஷயங்களைப் பேசக்கூடாது என நாம் நினைப்போம். சிலர் அப்படி உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்றே கூறலாம். அப்படிப்பட்ட விஷயங்களைத் தேடி தேடி பேசுகிறார்கள் இரு நண்பர்களும். வினுஷ்குமார் சென்னையில் இருக்கிறார். நவீன் ஜெர்மனியில் வாழ்கிறார். இணையத்தில் கலந்துகொண்டு பாட்காஸ்ட் நிறுவனத்தை தொடங்கி நடத்துகிறார்கள். 



வினுஷ்குமார், நவீன் பேசிய  இன்னும் யார் சார் சாதி பாக்குறா என்ற பாட்காஸ்டைக் கேட்டோம். அதில் வினுஷ்குமார், சாதி சார்ந்த தனது சொந்த அனுபவங்களைப் பேசினார். இதற்கு மறுமுனையில் பேசிய நவீன், ஏராளமான தமிழ் சினிமா அனுபவங்களை உதாரணம் சொல்லி பேசினார். அவர் வளர்ந்து வந்த சூழலில் சாதி சார்ந்த தாக்குதலுக்கு ஆளாகவில்லை. இதற்கு அவரது சாதி காரணமாக இருக்கலாம். பொருளாதாரம் மற்றுமொரு முக்கியமான காரணம். 70 நிமிடங்களுக்கு மேல் உள்ள பகுதி இது. இதுபோல நிறைய அத்தியாயங்களை வினுஷ்குமாரும், நவீனும் உருவாக்கியுள்ளனர். பிறரின் பங்களிப்பும் உள்ளது. 

இந்த பாட்காஸ்டை ஆப்பிள், ஸ்பாட்டிபை, கூகுள் பாட்காஸ்ட் ஆகிய தளங்களில் அணுகலாம்.  

வீனா பாட்காஸ்டைக் கேட்க .....

https://podcasts.google.com/feed/aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy8yMWQyNTI3OC9wb2RjYXN0L3Jzcw/episode/YmZhZWU5N2MtNzVhNi00NDliLWFlNTctNTkxNGM0NWJlZTlj?hl=en-IN

கருத்துகள்