எப்போதும் இணைந்திருக்கச் செய்யும் தொழில்நுட்பங்கள்!
ரிங் ஜென் 4
இது நான்காம் தலைமுறை வீடியோ டோர்பெல். வைஃபை வசதியும் பிற அம்சங்களும் நிறைய மேம்பட்டிருக்கிறது. யார் உங்கள் வீட்டுக்கு வருகிறார்கள். கதவை தட்டுபவர்கள் யார், பிறர் வீட்டுக்கு செல்பவர்கள் என நிறைய விஷயங்களை கண்காணிக்க முடியும். மேலும் காலிங்பெல் அழுத்துபவர்களுக்கு சொல்ல நான்கு வகையான ப்ரீசெட் பதில்களும் உள்ளன.
விலை 16,900
இது மூன்றாம் தலைமுறை கருவி. 10.1 இன்ச் திரை கொண்ட சாதனம். இதனால் இதில் எளிதாக பிறருடன் பேச முடியும். ஸ்ட்ரீமிங் வீடியோக்களை பார்க்க முடியும். பிற சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்தலாம்.
விலை 24,999
ஃபர்போ டாக் கேமரா
இது நாய்க்கான கேமரா. இதன்மூலம் நாம் வீட்டில் இல்லாதபோது கூட நாய்க்கு உணவு அளிக்க முடியும். இதில் நாயை கவனிப்பதோடு ஆடியோவும் உண்டு. இதில் உள்ள ஸ்னாக்ஸ் டிஸ்பென்சர் மூலம் நாய்க்கு உணவு அளிக்க முடியும். இதில் அலெக்ஸாவை இணைத்தால் போதுமானது. படத்தின் தரமும் சிறப்பாக உள்ளது.
விலை 26,500
ஆர்லோ எசன்ஷியல் ஸ்பாட்லைட் கேமரா
வயர்லெஸ் முறையில் இயங்கும் பாதுகாப்பு கேமரா. வைஃபையில் இணைத்தால் போதும். உங்களுக்கு சொந்தமாக சொத்துக்களை எளிதாக பராமரித்துப் பார்த்துக் கொள்ளலாம். 1080 பிக்சல் தரத்தில் வீடியோக்கள் உள்ளது. எனவே எளிதாக செட்டப் செய்து வீட்டைப் பாதுகாக்க முடியும்.
விலை 9,000
ரேஷர் கியோ
இது ஒரு வெப்கேம்தான். இதன் மூலம் எளிதாக வீடியோ வழி நிகழ்ச்சிகளில் நீங்கள் பங்கேற்கலாம். 720 பிக்சல் கொண்ட கேமரா. சாட் செய்ய வீடியோ நிகழ்ச்சிகளில் பங்கேற்க நிறைய அம்சங்களை நிறைத்திருக்கிறார்கள்.
விலை 9,900
டி3 இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக