உக்ரைனில் உருவாக்கப்பட்ட முழுக்கியமான மென்பொருள் சேவைகள்!
இப்போது இந்தியாவில் உள்ள தேசிய ஊடகங்களில் முக்கியமான விவாதம், உக்ரைனில் நடைபெறும் போர் காரணமாக அங்கிருந்து இந்தியாவுக்கு வரும் மருத்துவ மாணவர்கள்தான். இத்தனை பேர் ஏன் அங்கே போனார்கள் என இப்போதுதான் தூங்கி எழுந்தது போல உற்சாகமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் அரசு மருத்துவக்கல்லூரி இடங்களுக்கான போட்டி அதிகம். அதில் போட்டியிட முடியாதவர்கள், தனியார் கல்லூரியில் பணம் கட்டி படிக்க முடியாத சூழல். இங்குதான் முக்கியமான விஷயம் உள்ளது. இந்த சவாலான சூழலுக்காக அவர்கள், கனவை கைவிடவில்லை. உக்ரைன் சென்று படித்து வருகிறார்கள். உக்ரைன் மருத்துவப் படிப்பிற்கு மட்டுமல்ல, டெக் முன்னேற்றங்களுக்கும் புகழ்பெற்றது. அங்கு உருவான முக்கியமான அப்ளிகேஷன்களை இப்போது பார்ப்போம்.
வாட்ஸ்அப்
இப்போது மெட்டாவோடு சேர்ந்துவிட்டது. தொடக்கத்தில் இதனைத் தொடங்கிய ஜான் கூம் உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் பிறந்தவர். ஃபாஸ்டிவ் நகரில் வளர்ந்துள்ளார். பிறகுதான் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவுக்கு தனது அம்மா, பாட்டியுடன் இடம்பெயர்ந்திருக்கிறார். அப்படி இடம்பெயர்ந்தபோது அவரின் வயது 16.
பேபால்
பணத்தை இணையம் வழியாக கட்டும் நிறுவனமான பேபால் உக்ரைனின் வேர்களைக் கொண்டது. இதன் துணை நிறுவனரான மேக்ஸ் லெவ்சின், உக்ரைனைச் சேர்ந்தவர். யூதக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இப்போது இவர் நடத்தும் நிறுவனம், கடன் கொடுக்கும் சேவையை செய்கிறது.
க்ளீன் மை மேக்
ஆப்பிளின் மேக் கணினியை ப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த மென்பொருள் ஏற்கெனவே அறிமுகமானதுதான். இதனை உருவாக்கி மேம்படுத்தியது, உக்ரைனின் கீவ் நகரில் உள்ள மேக் பா என்ற நிறுவனம்தான். கடந்த ஆண்டு, இந்த நிறுவனம் தலைநகரில் ஆப்பிள் அருங்காட்சியகத்தை உருவாக்குவதாக கூறியிருந்தது.
ஜூபிள்
உலகிலுள்ள 71 நாடுகளில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தந்த நிறுவனம் இது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது, கீவ் நகரில்தான்.
ரிவோல்ட்
இது நிதி மேலாண்மை செய்யும் ஆப். இதனை உருவாக்கியவர்களின் ஒருவரான விலாத் யாட்சென்கோ, உக்ரைனின் மைகொலைவ் என்ற நகரைச் சேர்ந்தவர்.
சொலானா
பிளாக்செயின் நிறுவனமான சொலானாவின் தலைவர் அனாடோலி யாகோவென்கோ பிறந்தது உக்ரைனில்தான். நியர் எனும் புரோடோகாலை உருவாக்கியரான இலியா போலோசுகின் என்பவரும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்தான்.
கிராமர்லி
யாருமே யோசிக்காதபடி ஆங்கில இலக்கணத்தை சொல்லிக்கொடுக்கும் சேவை இது. இதனை உருவாக்கியவர்கள் மூன்று பேரும் உக்ரேனியர்கள்தான். நிறுவன மதிப்பு 13 பில்லியன் டாலர்கள். நிறுவனத்தின் தலைமையகம், கீவ் நகரில் உள்ளது.
ஸ்நாப்சாட்
இதிலுள்ள மாஸ்கிங் எனும் தொழில்நுட்பத்தை உக்ரைனின் கீவ் நகரிலுள்ள லுக்செரி என்பவரின் குழுதான் உருவாக்கியது.
ரீஅட்டில்
இது ஆப் உருவாக்கும் மேம்படுத்தும் குழு, நான்கு நண்பர்கள் இணைந்து இந்த நிறுவனத்தை தொடங்கினார்கள். உக்ரைனில் உள்ள ஒடஸ்ஸா எனும் இடத்தில் அலுவலகம் உள்ளது. இப்போது ஆப்பிளின் நிறுவனத்திற்கான ஆப்களை உருவாக்கி வழங்குகிறார்கள் .
டைம்ஸ் ஆப் இந்தியா
கருத்துகள்
கருத்துரையிடுக