பத்ம விருதுகளைப் பெற்ற சாமானியர்கள்! - பினோதேவி, ராய் சிங்காபாய், லதா தேசாய்

 



பினோ தேவி


லூரெம்பம் பினோ தேவி, 77

மணிப்பூரைச் சேர்ந்த கலைஞர். பினோ தேவி, தனது மாநிலத்தில் அழிந்து வந்த லீபா எனும் உடையில் செய்யும் அலங்கார வேலைக்காக புகழ்பெற்றவர். எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர் தேவி. ஐம்பது ஆண்டுகளாக அழிந்து வரும் கலையைக் காப்பாற்ற போராடி வருகிறார். 

கலையின் மீதான ஆர்வத்தால் தனது மாமியாரிடம் இருந்து லீபா கலையைக் கற்று செய்து வந்தார். மேலும் அதனை ஆர்வமுள்ள மாணவர்களும் கற்றுக் கொடுத்தார். மெய்டெய் எனும் இனக்குழு மக்களை நினைவுபடுத்துவது லீபா எனும் இக்கலை என்பது குறிப்பிடத்தக்கது. 


வி எல் என்காகா


வி எல் என்காகா 91

மிசோரம் மாநிலத்தில் இந்தி பிரசார சபையை தொடங்கி வைத்தவர். 1954இலிருந்து இந்தியை அங்கு பரப்ப முயன்று வருகிறார். மிசோரம் மாநிலத்திற்கும் இந்தி மொழிக்கும் கலாசார பாலம் அமைத்து வருகிறார். ஏறத்தாழ அறுபது ஆண்டுகளாகவே இப்பணியை என்காகா செய்து வருகிறார். மொழியை அனைவருக்கும் கற்பிப்பதன் வழியாக அரசையும் மக்களையும் ஒன்றிணைக்கிறார் என்று விருதுக்கான குறிப்பில் எழுதியிருக்கிறார்கள். 


காமித் ராமிலாபென் ராய்சிங்காபாய்


காமித் ராமிலாபென் ராய்சிங்காபாய் 52

பழங்குடி மக்களுக்கான சமூக செயற்பாட்டாளர். குஜராத்தின் டாபி பகுதியைச் சேர்ந்தவர். கல்வி, சுகாதாரம், உடல்நலம் ஆகியவற்றுக்கு காமித் செய்த செயல்பாடுகளுக்காக விருது வழங்கப்பட்டுள்ளது. திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை ஒன்பது கிராமங்களில் ஒழித்ததில் காமித் பங்காற்றியிருக்கிறார். துப்புரவு பணிக்காக 200க்கும் மேற்பட்ட குழுக்களை அமைத்துள்ளார். வெளிப்புறத்தில் மலம் கழிப்பது பற்றிய பிரசாரத்தை செய்திலும் கவனிக்க வைத்த ஆளுமை இவர். 

லதா தேசாய் 75

இவர் ஒரு மருத்துவர். இவரது கணவர் அனில் தேசாயும் மருத்துவர் தான். அமெரிக்காவில் பார்த்து வந்த வேலையை கைவிட்டு குஜராத்திற்கு வந்தார். கிராம மக்களுக்கு சிகிச்சை செய்யவேண்டும் என்பதுதான் இவரது கனவு. சேவா எனும் திட்டத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியுள்ளார். ஆயிரம் கிராமங்கள், 24 லட்சம் நோயாளிகள் என்பது இவரின் ஆல்டைம் ரெக்கார்ட். தொழில்திறனுக்கான மையங்களை அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதும் இவரின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்று. 


கிர்தாரி ராம் கோஞ்சு


கிர்தாரி ராம் கோஞ்சு 72

நாக்புரி கலாசாரத்தை பரப்ப முயன்று வரும் ஆளுமை. இவரும் 50 ஆண்டுகளாக கடுமையாக உழைத்து பிராந்திய மொழி, கலாசாரத்தை மக்களிடையே பரப்பி வருகிறார். 25 நூல்களை எழுதியிருக்கிறார். இதில் நாடகங்களும் உண்டு. இவற்றில் பெரும்பாலும் நாக்புரி கலாசாரம் சார்ந்ததுதான். பழங்குடிகளின் உரிமைக்காகவும் பேசியுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்


 





கருத்துகள்