பதப்படுத்துதல் முறையைக் கண்டுபிடித்து 160 ஆண்டுகள்!
லூயிஸ் பாஸ்டர்
அமுல் தாஸா என்ற பால் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படுகிறது. 200 மி.லி. பதினைந்து ரூபாய்தான். இதனை காய்ச்சாமலேயே கடையில் வாங்கியவுடனே குடிக்கலாம். மொத்தம் 180 நாட்கள் கெடாது என கம்பெனியினர் சொல்லுகிறார்கள். எப்படி இந்த செயல்பாடு சாத்தியமானது.?
பதப்படுத்துதல்தான். அதன் முன்னேற்றம்தான் இந்த சாதனைக்கு காரணம். பாலில் உள்ள பாக்டீரியாக்களை கொல்லவே அதனை கொதிக்க வைக்கிறார்கள். ஆனால் பல்லாண்டுகளுக்கு முன்னர் இப்படி பாலை கொதிக்க வேண்டுமென யாருக்கும் தெரியாது.
பாலை 60 முதல் 100 டிகிரி செல்சியஸ் வரை கொதிக்க வைத்தால் அதிலுள்ள நுண்ணுயிரிகளைக் கட்டுப்படுத்த முடியும். இந்த முறையை கண்டுபிடித்தவர், பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர் லூயிஸ் பாஸ்டர். இவர், 1822ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி பிறந்தவர். ஈகோல் நார்மலே சுப்பீரியர் எனும் இடத்தில் படித்தார். படித்து முடித்து தொடக்க பள்ளி ஒன்றில் இயற்பியல் ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தார்.
1856ஆம் ஆண்டு லூயிஸைப் பார்க்க, உள்ளூர் மனிதர் ஒருவர் வந்தார். அவர் தான் தயாரித்த பீட்ரூட் ஜூஸ் கெட்டுப்போனதைப் பற்றி சொன்னார். அதனை ஆராய்ந்த லூயிஸ், அதில் சில நுண்ணுயிரிகள் ஈஸ்டோடு இருப்பதைக் கண்டுபிடித்தார். அதனை அதிக வெப்பநிலைக்கு கொதிக்க வைத்து உடனே குளிர்வித்தால் நுண்ணுயிரிகளைக் கொல்ல முடிகிறது. பொருளை கெடாமல் காக்க முடியும் என்பதைக் கண்டுபிடித்தார். இதைத்தான் பதப்படுத்தல் என்கிறோம். பாய்ஸ்சுரைசேஷன் என்பது இதுதான். 1862ஆம் ஆண்டு, ஏப்ரல் 20ஆம் தேதி தனது பதப்படுத்தல் சோதனையை முதன்முறையாக செய்தார். இதைத்தான் இன்று உலகம் முழுக்க செய்கிறார்கள்.
நுண்ணுயிரிகள் பற்றி கொள்கை, ஆராய்ச்சி இன்று நிறைய மாறியிருக்கிறது. ஆனால் தொடக்க கால கொள்கையை உருவாக்கியவர் இவர்தான். இதன் தாக்கத்தில் தான் மருத்துவக் கருவிகளை சுத்தம் செய்வது வரை நிறைய முன்னேற்றம் நடந்தது. 2022ஆம் ஆண்டு பதப்படுத்துதல் சோதனையை லூயிஸ் செய்து 160 ஆண்டுகள் ஆகிறது.
டெல் மீ வொய் இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக