176 பிறந்த தினத்தை கொண்டாடும் அறிவியலாளர்! - அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்
பெல், அறிவியலை நாடியது அவருடைய அம்மாவுக்காகத்தான். அவருக்கு காது கேட்பதில் பிரச்னை இருந்தது. இதனை சரிசெய்யவே அறிவியலில் தீர்வுகளை தேடிக்கொண்டிருந்தார். அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்லின் அப்பா, குரல்வளையின் அமைப்பு போன்ற இயந்திரம் ஒன்றை உருவாக்கினார். இதனை விசிபிள் ஸ்பீச் என்று பெயரிட்டு அழைத்தார்.
பெல், பல்வேறு அறிவியல் சமாச்சாரங்களை தன் அப்பாவிடமிருந்து தான் கற்றுக்கொண்டார். 1870ஆம் ஆண்டு பெல்லின் குடும்பம் கனடாவிற்கு சென்றது. பெல் தொடர்ந்து காது கேளாமை பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். இதுபற்றி பிறர் கற்க பள்ளி ஒன்றைத் திறந்தார். பேச்சு நுட்பம், குரல் அமைப்பு முறை என்பதுதான் இதன் பெயர். 1872இல் பாஸ்டன் நகரில் இந்த பள்ளியைத் தொடங்கி நடத்தினார்.
காது கேளாமைக்கான ஆராய்ச்சியின்போதுதான் தகவலை கருவிகள் வழியாக அனுப்பினால் என்ன என்று தோன்றியது. இதற்கான ஆராய்ச்சிகளையும் செய்யத் தொடங்கினார். 1876ஆம் ஆண்டு மார்ச் 10 அன்று, பெல்லும் அவரது உதவியாளருமான தாமஸ் வாட்சன் ஆகிய இருவரும் டிரான்ஸ்மீட்டர் வழியாக தகவல் ஒன்றை அனுப்பினர். பக்கத்து அறைக்கு அனுப்பிய தகவல் இதுதான். மிஸ்டர் வாட்சன் இங்கு வாருங்கள் நான் உங்களைப் பார்க்க விரும்புகிறேன். இதனை தான் பெல் தன் உதவியாளருக்கு அனுப்பி சோதித்தார்.
பெல்லுக்கு தனது கண்டுபிடிப்பை காப்புரிமை செய்வதை விட முக்கியமாக பட்டது. அதனை நல்ல விலைக்கு விற்கலாம் என்பதுதான். இதன் அடிப்படையில் அப்போதைக்கு புகழ்பெற்ற நிறுவனமாக இருந்த வெஸ்டர்ன் யூனியன் என்ற நிறுவனத்தை அணுகினார். ஆனால் அவர்கள் பெல்லின் கண்டுபிடிப்பை நிராகரித்து விட்டனர். பிறகுதான், பெல் வைராக்கியமாக பெல் டெலிபோன் கம்பெனியைத் தொடங்கினார். 1877இல் தொடங்கிய நிறுவனம் இன்றுவரையில் செயல்பட்டு வருகிறது. அதன் பெயர் ஏடி அண்ட் டி.
பெல் தனது ஆய்வை டெலிபோன் கண்டுபிடித்ததோடு நிற்கவில்லை. மெட்டல் டிடெக்டர், ஆடியோமீட்டர், ஐஸைக் கண்டுபிடிக்கும் கருவி ஆகியவற்றைக் கண்டுபிடித்தார். இதற்கிடையில் நீரிழிவு நோய் பாதிப்பு உச்சத்தை அடைந்திருந்தது. தனது 75 வயதில் 1922ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 அன்று காலமானார்.
இவர் பிறந்தது ஸ்காட்லாந்து நாட்டில். 1847ஆம்ஆண்டு மார்ச் 3 அன்று அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் பிறந்தார். இவரது அப்பா பேராசிரியராக இருந்தார். பெயர், அலெக்ஸாண்டர் மெல்வில்லே பெல்.
டெல் மீ வொய் இதழ்
2022ஆம் ஆண்டு இந்த புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளரின் 176 பிறந்த ஆண்டைக் கொண்டாடுகிறோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக