இறந்துபோன விலங்குகளை பதப்படுத்தியது போல வைத்திருக்கும் நார்டன் ஏரி!





தி வாட் இஃப் ஷோ







நாட்ரான் ஏரி

கிழக்கு ஆப்பிரிக்காவின் தான்சானியாவில் அமைந்துள்ளது நாட்ரான் ஏரி (



). உலகிலுள்ள வினோதமான தன்மை கொண்ட இடங்களில் இதுவும் ஒன்று.  ஏரியிலுள்ள நீர் வெப்பம் கொண்டதோடு, உப்பின் அளவும் அதிகமாக உள்ளது. இந்த நீர்நிலையிலுள்ள சிறிய பாக்டீரியாவகை, உப்பை  உட்கொள்கிறது. 

மோசமான சூழ்நிலை இருந்தாலும் கூட இங்கு இனப்பெருக்கம் செய்ய ஃபிளாமிங்கோ  (flamingo)பறவைகள் ஆயிரக்கணக்கில் வருகின்றன. எவாசோ என்கிரோ (Ewaso ng'iro)ஆறு மூலம் ஏரி நீர்வளத்தைப் பெறுகிறது. நாட்ரான் ஏரி, 60 கி.மீ. அளவுக்கு பரந்து விரிந்தது. இதன் ஆழம் 3 மீட்டர்தான். நீரின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாக உள்ளது. நாட்ரான் ஏரியிலுள்ள நீர், கடலுக்கோ செல்வதில்லை. வெப்பநிலை காரணமாக ஆவியாகிறது. மிஞ்சுவது உப்பும், பிற கனிமங்களும்தான். 

ஏரியின் வெப்பத்திற்கு காரணம், அதன் கீழுள்ள ஆல் டோயினோ லெங்காய் (ol doinyo lengai)எரிமலைதான். இதன்  எரிமலைக் குழம்பு, ஏரி நீரை சூடாக்குகிறது. இதன் காரணமாக நீர், ஆவியாகிறது. ஏரி அமைந்துள்ள கிழக்கு ஆப்பிரிக்கா ரிப்ட் பள்ளத்தாக்கு பகுதியில் புவித்தட்டுகள் சந்திக்கின்றன. இதன் விளைவாக, இங்கு  மலைத்தொடர்களும் எரிமலைகளும் அதிகம். ஆல் டோயினோ லெங்காய் எரிமலை, குறிப்பிட்ட இடைவெளியில் எரிமலை குழம்பை வெளியேற்றி வருகிறது. இதன் உயரம் 2,962 மீட்டர் ஆகும். 

ஏரிப்பகுதியில் பறவை, வௌவால்கள் இறந்து கிடப்பதைப் பார்ப்பவர்கள், ஆச்சரியப்படுவார்கள். நீரில் உள்ள உப்பு காரணமாக பறவைகள் பதப்படுத்தப்பட்டது போல இருக்கும். ஏறத்தாழ கற்களால் ஆனவை போல என ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள். எகிப்தில் புகழ்பெற்ற மம்மிகளுக்கு பயன்படுத்திய உப்பு ( sodium carbonate, sodium bicarbonate ), நாட்ரான் என்று அழைக்கப்பட்டது. இந்த ஏரியும் உப்பின்  தன்மை காரணமாகவே அதேபெயரால் அழைக்கப்படுகிறது. 

 தகவல்

amazing earth 

the most incredible placesfrom around the earth


கருத்துகள்