இடுகைகள்

இடம்பெயர்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அதிவேகமாக வளரும் இந்திய நகரங்கள்!

படம்
 அண்மையில் தி எகனாமிஸ்ட் எனும் இதழ் செய்த ஆய்வில் இந்தியாவிலுள்ள கேரள மாநிலத்திலுள்ள நகரங்கள் அதிவேக வளரும் நகரங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கேரள மாநிலத்தின் மலப்புரம் உள்ளிட்ட மூன்று  நகரங்கள் அதிவேகமாக வளரும் நகரங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இங்கு குழந்தைகள் பிறப்பு சதவீதம் குறைவாக உள்ளது. ஆனால் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில், நூறு சதவீத மக்கள் நகரவாசிகளாக மாறியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தி எகனாமிஸ்ட் இதழ் ஆய்வில் மலப்புரம், கோழிக்கோடு, கொல்லம் ஆகிய மூன்று நகரங்களும் அதிவேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்து ஆச்சரியம் தருகின்றன. நகரங்களின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக ஆய்வாளர்கள் கூறுவது, பல்வேறு தொழிலாளர்களின் இடப்பெயர்ச்சி, கிராமங்களிலிருந்து மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருவது என இரு காரணங்களைத்தான்.  கேரள மாநிலத்தில் 50 சதவீதம் பேர், விவசாயத்தை விட்டு வெளியேறி சேவைத்துறை சார்ந்த வேலைகளை செய்து வருகின்றனர். இந்த வேலைகளுக்காகவே கிராமத்தை விட்டு விலகி நகரத்திற்கு வருகின்றனர். இதன் காரணமாகவே வளர்ச்சி வேகம் மக்கள் இடம்பெயரும் நகரங்களில் அத