உலகின் சக்தி வாய்ந்த நூறு பெண்கள் பட்டியல் - ஆசியா
மை கியு லின் இயக்குநர், வினாமில்க் வியட்நாம் mai kieu lien vinamilk பிரான்சில் பிறந்து சோவியத் யூனியனில் கல்வி கற்ற பெண்மணி. 1992ஆம் ஆண்டு தொடங்கி வினாமில்க் நிறுவனத்தை லின் நடத்தி வருகிறார். நாட்டின் மிகப்பெரிய உணவு மற்றும் குளிர்பான தயாரிப்பு நிறுவனம், வினாமில்க். பால் உற்பத்தி நிலையத்தில் பொறியாளராக செயல்பட்டவர், பட்டம் பெற்றபிறகு வினாமில்கின் துணை இயக்குநராக நியமிக்கப்பட்டார். அரசு நிறுவனமான வினாமில்க், 2003ஆம் ஆண்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. அன்னா மா மார்கரிட்டா பாட்டிஸ்டா டை இயக்குநர் அயலா லேண்ட் பிலிப்பைன்ஸ் anna ma margarita bautista dy ayala land 2008ஆம் ஆண்டு, நிலத்தை வாங்கி விற்கும் அயலா நிறுவனத்தின் கமிட்டியில் உறுப்பினராக இருந்திருக்கிறார். கடந்த ஆண்டுதான் நிறுவனத்தின் இயக்குநராக பொறுப்பேற்றிருக்கிறார். வீட்டு விற்பனை, வணிக மால் ஆகிய வணிக பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு செய்து வருகிறார். அயலா நிறுவனம் ஹோட்டல், ரிசார்டுகள், வணிக மால்கள் வீடுகள், அலுவலகங்களை கட்டி விற்று வருகிறது. கடந்த ஆண்டு வருமானம் 22 சதவீதமாக உயர்ந்துள்ளது. பிலிப்பைன...