கல்வி, செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிக்கென வாரி வழங்கிய தொழிலதிபர்கள்!
அள்ளிக்கொடுத்த கரங்கள்
உலகிலுள்ள பெரும்பாலான தொழிலதிபர்கள் ஆண்டுதோறும் தங்களுடைய செல்வத்தில் குறிப்பிட்ட பகுதியை, தங்களுடைய அறக்கட்டளைக்கு ஒதுக்கி வருகின்றனர். பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்குகிறார்கள். இதில் கணிசமான பகுதி கல்விக்கும், தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்கும் செல்கிறது. போர்ப்ஸ் இந்தியா ஆசியா பசிபிக் பகுதியில் இப்படி அள்ளிக்கொடுத்தவர்களைப் பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் பதினைந்து பேர் இப்பட்டியலில் உள்ளனர். அவர்களைப் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.
ஜப்பானைச் சேர்ந்த தொழிலதிபர் டாகேமிட்சு டகிஸாகி. இவர், 2.6 பில்லியன் மதிப்பிலான பங்குகளை தன்னுடைய பவுண்டேஷனுக்கு வழங்கியுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ, நிக்கோலா ஃபாரஸ்ட் ஆகியோர் 3.3 பில்லியன் மதிப்பிலான பங்குகளை தொண்டு நிறுவனமான மிண்டெரூவுக்கு வழங்கியுள்ளனர்.
பெரும்பாலான பணக்காரர்கள் உயர்கல்வி, ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றுக்காக தங்களது செல்வத்தை தானமாக வழங்கியுள்ளனர். மிட்டியா குழும நிறுவனர், ஹே ஷியாங்ஜியான் 140 மில்லியன் டாலர்களை செயற்கை நுண்ணறிவு, காலநிலை மாற்ற ஆராய்ச்சிக்காக ஒதுக்கியுள்ளார். சீனாவில் தொழிலதிபர் லீ கா ஷிங், 7.7 மில்லியன் டாலர்களை செயற்கை நுண்ணறிவு பங்களிப்பு தொடர்பான மருத்துவப் பயிற்சிக்காக வழங்கியுள்ளார். இதன் காரணமாக இரு பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தோனேஷியாவைச் சேர்ந்த தொழிலதிபர் லோ டக் க்வாங், 73 மில்லியன் டாலர்களை லீ குவான் யியூ, பொதுக்கொள்கை கற்பிக்கும் பள்ளிக்கு கொடுத்துள்ளார். இதன்மூலம், அரசு சேவைகள், கொள்கை தொடர்பான முன்னேற்றம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டேகேமிட்சு டாகிஸாகி
நிறுவனர், கௌரவத் தலைவர்,கீயென்ஸ்
78, ஜப்பான்
கீயென்ஸ் பவுண்டேஷன் மூலம் வறுமை நிலையில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறார். 2018ஆம்ஆண்டு தொடங்கப்பட்ட பவுண்டேஷன், உலக அளவில், உள்நாட்டிலும் மாணவர்களை தேர்ந்தெடுத்து மாதம் 1 லட்சம் ரூபாய் என நான்கு ஆண்டுகளுக்கு உதவித்தொகையை வழங்குகிறது. கல்வியில் சாதனை செய்த மாணவர்களை ஆண்டுதோறும் பட்டியலிட்டு 600 நபர்களுக்கு நிதியுதவி, பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இளங்கலைப் பட்டம் பயில்பவர்களுக்கு நிதியுதவி உண்டு. இந்த வகையில் 2 ஆயிரம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஆண்டுக்கு தலா 3 லட்சம் ரூபாய் உதவியாக வழங்கப்படுகிறது. 2015ஆம் ஆண்டு நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகியவர், தற்போது வரை கௌரவத் தலைவராக உள்ளார். டாகிஸாகி கல்லூரி படிப்பை முடிக்காதவர். 26 வயதில் இருந்து தானியங்கி சென்சார் தொழிலில் நுழைந்து வெற்றி பெற்றவர். '''அரசு மாணவர்களுக்கு அளிக்கும் நிதி என்பது, அவர்கள் திரும்ப வங்கியில் கட்டுவதாக இருக்கக்கூடாது. எங்களது நிதியுதவி மூலம் மாணவர்கள் தங்களது லட்சியத்தை நோக்கி கவனமாக, நேர்மையாக நடைபோடத் தொடங்கியுள்ளனர்' என்று தனது கருத்தை டாகிஸாகி தெரிவித்துள்ளார்.
ஜேம்ஸ் சிம்ஸ்
ஆண்ட்ரூ பாரஸ்ட் 62, நிறுவனர், போர்டெஸ்குயு மெட்டல்ஸ் குழுமம், ஆஸ்திரேலியா
, நிகோலா பாரஸ்ட் 62, துணை நிறுவனர், மிண்டெரூ பவுண்டேஷன்
இருவருமே தம்பதிகள். தொழிலில், தன்னார்வ அமைப்பில் ஒன்றாக இணைந்திருந்தனர். அண்மையில்தான் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்தனர். தன்னார்வ அமைப்பைப் பொறுத்தவரையில் செயல்பாடுகளை ஒன்றாக இணைந்து செயல்படப்போவதாக கூறியுள்ளனர். மிண்டெரூ பவுண்டேஷன் அமைப்பு, சிறுவர்களின் கல்வி, வறுமை ஒழிப்பு, பூர்விக ஆஸ்திரேலிய மக்களுக்கு வேலைவாய்ப்பு, கடல்வளம் பாதுகாப்பு, போரில் பாதுகாக்கப்பட்ட மக்களுக்கு உதவி என செயல்பட்டு வருகிறது. சொத்துகளை சேகரிப்பதை விட குடும்பம், சமூகமே முக்கியமானது. நாங்கள் இந்த அடிப்படையில்தான் செயல்பாடுகளை செய்து வருகிறோம் என்று நிகோலா பாரஸ்ட் கூறினார்.
குளோரியா ஹராடிடோ
ரானா வெஹ்பே வாட்சன்
போர்ப்ஸ் இந்தியா
கருத்துகள்
கருத்துரையிடுக