அதிர்ச்சிகரமான சம்பவமும், அதைப் பற்றிய நினைவுகளும்!

 















அதிர்ச்சிகரமான நிகழ்ச்சியும், அதன் நினைவுகளும் 


ஒரு அரசியல் தலைவர் வெடிகுண்டு வைத்து கொல்லப்படுகிறார். இதை அறிந்தவர்கள் முதலில் அதிர்ச்சியடைவார்கள். அதேசமயம், அது சம்பந்தமாக செய்திகளை நாளிதழ்களில் தேடிப்படிப்பார்கள். அந்த சமயம் தான் செய்துகொண்டிருந்தோம். யாருடன் இருந்தோம். பேசினோம் என்பது கூட நினைவில் இருக்கும். அதாவது, பல்லாண்டுகள் கடந்தாலும் கூட அவர்களால் அந்த அதிர்ச்சியான சம்பவங்களை துல்லியமாக நினைவுகூரமுடியும். எப்படி, அந்த அதிர்ச்சியான சம்பவத்தை நினைவை திரும்பத் திரும்ப அவர்கள் நினைவுகூர்ந்துகொண்டே இருப்பதால்தான். இதை உளவியல் ஆய்வாளர் ரோஜர் ப்ரௌன், 'ஃபிளாஸ்பல்ப் மெமரிஸ்' என்று குறிப்பிட்டார். 


1963ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை அமெரிக்கர்கள் மட்டுமல்ல உலகமே மறக்காது. இதை தொடர்புபடுத்தி திரைப்படங்கள், ஆவணப்படங்கள், நூல்கள், தொலைக்காட்சி தொடர்கள் கூட தயாரிக்கப்பட்டன. கென்னடி, மார்ட்டின் லூதர் கிங் ஆகிய இருவரையும் கூட எடுத்துக்கொள்ளுங்கள். இவர்கள் இருவருமே படுகொலை செய்யப்பட்டவர்கள்தான்.


 சாதி, மத, மொழி வேறுபாடின்றி இருவரையும் நினைவுகூர்பவர்கள் உலகம் முழுக்க உண்டு. ஏன் இந்த சம்பவம் ஒருவரது நினைவில் அப்படியே அழியாமல் இருக்கிறது? அதற்கு காரணம் அவர்கள் இறந்தவிதம். இந்தியா என்றால் மகாத்மா காந்தியை, கோட்சே என்ற ஆர் எஸ் எஸ்  அமைப்பைச் சேர்ந்த ஆள் சுட்டுக்கொன்றதைக் கூறலாம். ஆண்டுகள் கடந்தபிறகு ஒருவர் கொல்லப்பட்டதற்கான காரணத்தை, பார்வைக் கோணத்தை அதிகாரத்தில் உள்ளவர்கள் மாற்ற முயலலாம். ஆனால், உண்மையை யாரேனும் ஒருவர் கூறிக்கொண்டே இருப்பார். அதை யாராலும் தடுக்க முடியாது. 


ரோஜர் ப்ரௌன் என்ற உளவியல் ஆய்வாளர், இதுபற்றிய ஆய்வறிக்கையை ஃபிளாஸ்பல்ப் மெமரிஸ் என்ற பெயரில் எழுதி வெளியிட்டார். இது, நினைவுகள் பற்றிய ஆய்வறிக்கைகளில், செவ்வியல் தன்மை கொண்டதாக கருதப்படுகிறது.  அமெரிக்காவின் இரட்டை கோபுரம் இடிக்கப்பட்ட சம்பவம், உலகளவில் ஏற்படுத்திய அதிர்வலைகளைக் கூட  மேற்படி ஆய்வுக்கு உதாரணமாக கூறலாம். 


ஆய்வாளர் உல்ரிக் நெய்சர், ஸ்பெஷல் மெக்கானிசம் தியரி என்பதை கூறினார். அதாவது, அதிர்ச்சியான சம்பவத்தை ஒருவர் திரும்பத் திரும்ப நினைவுகூர்ந்துகொண்டே இருப்பதால் நினைவுகள் அழியாமல் உள்ளது என்று விவரித்தார். 



சைக்காலஜி புக் - டிகே புக்ஸ் 


spectrumlocalnews.com

கருத்துகள்