டீப்ஃபேக் வீடியோக்கள் ஏற்படுத்தும் பதற்றம்!
சில மாதங்களுக்கு முன்னர் சினிமா நடிகையான ராஷ்மிகாவின் டீப்ஃபேக் வீடியோ ஒன்று வெளியானது. வீடியோ என்றதும் ரெட் ட்யூப், ஜாவ் குரு போல இருக்கும் என எதிர்பார்க்கவேண்டாம். கருப்பு நிற பனியன் அணிந்த பெண் லிஃப்டில் ஏறுகிறார். அவரின் மார்பகங்கள் வெளியே தெரியும்படியான உடை. அவர் வேறு யாருமல்ல ராஷ்மிகாதான். இந்த வீடியோ இணையத்தில் பரவியதும். அது தான் அல்ல என்று நடிகை சமூக வலைத்தளத்தில் தனது எதிர்ப்பை பதிவிட்டார்.
ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரின் புகைப்படத்தை பிறர் பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்த வேண்டுமெனில் அதற்கு அவர் குறிப்பிட்ட பணத்தைக்கூட கொடுக்க நேரிடலாம். இதெல்லாம் தொடர்புடைய நபர் சார்ந்த விஷயம். விவகாரம். இதில் பிறர் கருத்து கூற பெரிதாக ஏதுமில்லை. அனிமல் என்ற இந்தி திரைப்படம் வெளிவருவதற்கு முன்னர்தான் டீப்ஃபேக் வீடியோ வெளியானது. அந்த படத்தில் ராஷ்மிகா, வாங்கிய காசுக்கு ஏற்ப நாயகனுடன் தெறமை காட்டியிருந்தார். அதைப் பார்த்தவர்கள் டீப்ஃபேக் வீடியோவே பரவாயில்லை என கமெண்ட் அடித்தனர். ஒருவரின் புகைப்படம், வீடியோவைப் பயன்படுத்த அனுமதி பெறுவது அவசியம். காப்புரிமை போன்றே இதை அணுக வேண்டும்.
கவர்ச்சி, ஆபாசம் தாண்டி டீப்ஃபேக் வீடியோ என்பது ஆபத்தானது. ஒருவர் அதை எப்படி என்ன மாதிரியாக பயன்படுத்துகிறார் என்பதைப் பொறுத்து பாதிப்பை ஏற்படுத்தும். இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் நடக்கும் போர் புதிதல்ல. அண்மைய போரில், தீவிரவாத அமைப்பான ஹமாஸ், இஸ்ரேலில் புகுந்து மக்களை கைது செய்து பணயக்கைதிகளாக பிடித்துக்கொண்டு காசாவுக்கு சென்றுவிட்டது. தொடக்கத்தில் பத்திரிகையாளர்களை அனுமதித்து வீடியோ எடுக்க அனுமதித்த இஸ்ரேல், பின்னாளில் அனைத்து புகைப்படங்களும் தனக்கு எதிராக திரும்ப அனுமதியை திரும்ப பெற்றுக்கொண்டது. இந்த போரில் நேரடியான தாக்குதல்களைப் போலவே மக்களை திசைதிருப்பும் பல்வேறு போலி செய்திகளும் டீபஃபேக் வீடியோக்களும் அதிகமாக உள்ளன.
இஸ்ரேலைச் சேர்ந்தவர், மைக்கேல் மத்தியாஸ். இவர் தொடங்கிய ஏஐ நிறுவனம் கிளாரிட்டி. போலிச்செய்திகளை அடையாளம் கண்டறிவதே இதன் பணி. ஹமாஸிற்கு ஆதரவாக, இஸ்ரேல் அரசுக்கு ஆதரவாக என இரு தரப்பிலும் ஏராளமான போலிச்செய்திகள் மக்களுடைய போன்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. உயிர்பயத்தில் உள்ளவர்கள், எது உண்மை எது பொய் என எப்படி உணர முடியும்?
இப்படி மக்களின் மனங்களை பயத்தில் ஆழ்த்துவதன் மூலம் பல்வேறு பயன்களைப் பெற தீய சக்திகள் முயல்கின்றன. பெரிய நிறுவனங்கள் மட்டுமல்ல, சாதாரண பொதுமக்களே கூட ஏஐயைப் பயன்படுத்தி போலியான குரல் தொடங்கி புகைப்படம், வீடியோக்களை உருவாக்கி பரப்ப முடியும். அதற்கான அத்தனை வசதிகளும் இணையத்தில் உள்ளன.
ரஷ்யா, உக்ரைனில் போர் நடைபெற்று வருகிறது. போர் தொடங்கிய காலத்தில் ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோ பரவியது. அதில் உக்ரைன் அதிபர் தோன்றி, தனது வீரர்களை ரஷ்யாவிடம் சரணடையுமாறு சொல்கிறார். இதேபோலவே இன்னொரு வீடியோல் ரஷ்ய அதிபர் தோன்றி பேசுகிறார். இந்த இரண்டுமே போலிதான். எது உண்மை, போலி என்று தெரியாதபடி புகைப்படங்கள், வீடியோக்கள் துல்லியமாக ஏஐ மூலம் உருவாக்கப்பட்டு வருகின்றன.
போரிடும் இரு நாடுகளுமே இணையத்தில் உள்ள சமூக வலைத்தளங்களில் போலியான தவறான தகவல்களை தங்களுக்கு ஆதரவாக பரப்பி வருகின்றன. சமூக வலைத்தளங்களும் தம் அல்காரிதம் மூலம் இந்த போலி வீடியோக்களை அதிகளவு மக்களுக்கு பரப்புகிறார்கள். அவர்களுக்கு அவர்களுக்கான தொழி்ல், லாபம் முக்கியம்.
இஸ்ரேலில் உள்ள கிளாரிட்டி நிறுவனம், உலகிலுள்ள பல்வேறு நாளிதழ், ஊடக நிறுவனங்களுக்கு போலியான வீடியோக்கள், செய்திகளை அடையாளம் கண்டறிய உதவியுள்ளது. இந்த ஏஐ நிறுவனம், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவிலும் இஸ்ரேலின் டெல் அவிவ் என இரு நகரங்களில் செயல்பட்டு வருகிறது. டெல் அவிவ் நகரில் உள்ள கிளாரிட்டி நிறுவனம், இஸ்ரேலின் உளவுத்துறையோடு இணைந்து செயல்பட்டு போர் புகைப்படங்கள் போலியா இல்லையா என கண்டுபிடிக்க உதவுகின்றன. ஓப்பன் ஏஐயின் சாட் ஜிபிடி தொழில்நுட்பம் இணையத்தில் வெளியிடப்பட்ட பிறகு போலியான செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் வெளிவருவது அதிகரித்துள்ளது. தொழில்நுட்பத்தை குறை சொல்வதல்ல நோக்கம். ஆனால் அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தவேண்டுமென்பதே முக்கியம்.
ஏஐக்கு எதிராக ஏஐயை நிறுத்தி அதன் வழியாக போலிகளைக் கண்டறிய கிளாரிட்டி நிறுவனம் முயல்கிறது. வீடியோவில் உள்ள நபரின் உருவம், குரல், முக பாவனைகளை கண்காணித்து அதன் உண்மைத்தன்மையை சோதித்து வருகின்றனர். நியூயார்க்கில் உள்ள ரியாலிட்டி டிஃபென்டர், எஸ்தோனியாவில் உள்ள சென்டினல் ஆகிய நிறுவனங்களும் போலி்செய்திகளை கண்டறிய முயன்று வருகின்றன. வலதுசாரிகளுக்கு காசு வாங்கிக்கொண்டு உதவும் மெட்டா கூட வேறுவழியின்றி, அரசியல் செய்திகளில் ஏஐ உருவாக்கம் உள்ளதா இல்லையா என விளம்பர ஆட்களைக் கூட கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளது. கூகுளும் கூட தான் வழங்கும் படங்களில் புகைப்படங்கள் பற்றிய ஆதார செய்திகளை வழங்கத் தொடங்கியுள்ளது. எது உண்மை, போலி என்று உண்மைகளை ஆழ அறிந்து கண்டறிவதற்கு உடல் மட்டுமல்ல மன வலிமையும் தேவை.
டீப்மீடியா
2017ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓக்லாண்டில் தொடங்கப்பட்ட ஏஐ நிறுவனம். ஐ.நா, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றோடு இணைந்து செயல்பட்டு போலி செய்திகளைக் கண்டறிய உதவுகிறது.
ரியாலிட்டி டிஃபென்டர்
2021ஆம் ஆண்டு அமெரிக்காவின் மான்ஹாட்டன் நகரில் தொடங்கப்பட்டது. கோல்ட்மன் சாக்ச்ஸ் நிறுவன அதிகாரி பென் கோல்மன் என்பவரால் ரியாலிட்டி டிஃபென்டர் உருவானது. கடந்த அக்டோபர் மாதம் 15 மில்லியன் டாலர்கள் முதலீட்டை ஈட்டியுள்ளது. ஏஐ மூலம் பல்வேறு விதமான குரல்களை உருவாக்குவது இந்த நிறுவனத்தின் சிறப்பம்சம்.
இன்டெல்
இந்த நிறுவனம், அண்மையில் டீப்ஃபேக் வீடியோக்களை கண்டறியும் ஃபேக் கேட்சர் என்ற மென்பொருளை வெளியிட்டது. போலியான வீடியோக்களை 96 சதவீத துல்லியத்துடன் கண்டறியும் திறன்பெற்றது.
ஃபார்ச்சூன் இந்தியா
விவியன் வால்ட்
மூலக்கட்டுரையை தழுவியது.
thanks - cartoon stock
கருத்துகள்
கருத்துரையிடுக