எனது இளமைக் காலத்தில் பெண் இயக்குநர்கள் மிக குறைவு! - ஜோடி ஃபாஸ்டர், திரைப்பட நடிகை
ஜோடி ஃபாஸ்டர்
திரைப்பட நடிகை
சைலன்ஸ் ஆஃப் தி லேம்ஸ் படத்தில் கிளாரைஸ் ஸ்டார்லிங் பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தீர்கள். ஒருவகையில் எதிர்காலத்திற்கான பெண் டிடெக்டிவ் பாத்திர வடிவமைப்பிற்கு கூட அது உதவும் என்று கூறலாம். பாப் கலாசாரத்தில் அந்த பாத்திரம் எப்படி வளர்ச்சி பெற்றுள்ளதாக கருதுகிறீர்கள்?
நான் அப்போது சிறப்பான ஒன்றைச் செய்ததாகவெல்லாம் நினைக்கவில்லை. நாயகனின் பயணத்தை அப்படியே செய்தேன். அந்த பாத்திரம் அப்போது ஆண்களுக்கானதாகவே இருந்தது. சைலன்ஸ் ஆஃப் தி லேம்ஸ் படம், ஆண்களுக்கான பாத்திரத்தை பெண்ணுக்கானதாக பாதை மாற்றியது. கடந்த முப்பது ஆண்டுகளாக பல்வேறு வேறுபட்ட குரல்களை நாம் கேட்டு வருகிறோம். பெண் நாயகிகள், எதிர்மறை நாயகர்கள் என்பது சற்று சிக்கலானது. குழப்பம் நிறைந்ததும் கூட.
ட்ரூ டிடெக்டிவ் நைட் கன்ட்ரி படப்பிடிப்பு ஐஸ்லாந்தில் நடைபெற்றது. தீவிரமான பருவநிலை கொண்ட இடத்தில் நடந்த படப்பிடிப்பு எப்படியான அனுபவமாக இருந்தது?
அதுபோன்ற இடத்தில் நடக்கும் படப்பிடிப்பு, உங்களுக்குள் உயிர் பிழைக்கும் வேட்கையைத் தூண்டக்கூடியது. ஒரே நேரத்தில் இதுப்பற்றிய பாராட்டும், வாழ்வதற்கான அவமானமும் மனதில் எழும். தீவிரமான பருவச்சூழல் கொண்ட இடத்தில் வாழும்போதுதான், மனிதர்கள் பூமிக்கு இழைத்துள்ள சிக்கலை மனப்பூர்வமாக உணரமுடியும்.
நியாத்தில் நீச்சல்வீரர் டயானா நியாத், பயிற்சியாளர் போனி ஸ்டோல் ஆகியோரின் நட்பு பெரிதும் பேசப்பட்ட ஒன்று. உங்களை கதையில் கவர்ந்தது எது?
போனி, டயானா ஆகியோரின் நட்புறவு எனக்கு பிடித்திருந்தது. ஷார்க், ஜெல்லி மீன்கள் உள்ள வளைகுடா நீர்ப்பரப்பில் 110 மைல்கள் நீந்துவது என்பது ஆச்சரியமான ஒன்று. நான் பெரிதும் மதிப்பும் மரியாதையும் கொடுப்பவர் அன்னெட் பென்னிங். அவருடன் வேலை செய்வதை பெரிதும் விரும்பினேன்.
1991ஆம் ஆண்டு டைம் அட்டைப்பட கட்டுரையில், இயக்கம் என்பது பெண்களுக்கானது அல்ல என்று கருத்து கூறியிருந்தீர்கள். இப்போது மாறியுள்ள சூழ்நிலையை எப்படி பார்க்கிறீர்கள்?
நான் இருபது வயதில் கூறியுள்ள கருத்துகளை இப்போது பார்க்கும்போது நானா இப்படி பேசினேன் என்று ஆச்சரியமாக இருக்கிறது. அப்போதைய சூழலில் அப்படி கூறியது சரிதான். என்னுடைய இளமைக்காலத்தில் அமெரிக்க பெண் திரைப்பட இயக்குநர்கள் மிகச்சிலரே இருந்தனர். நான் திரைப்பட இயக்குநராக அனுமதிக்கவில்லை என்று கூறவில்லை. அது உண்மையல்ல. பார்பி படத்தை இயக்கிய கிரேட்டா ஜெர்விக்கைப் பார்க்கிறேன். அவருக்கு பின்புலமாக உள்ளவர்கள், நீ ஆபத்தில் இல்லை என்று கூறிக்கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவரது வெற்றியைப் பார்க்கும்போது எனது முகத்தில் புன்னகை அரும்புகிறது.
திரைப்பட வாழ்க்கையில் நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன?
நீங்கள் அனைத்தையும் கடினமான முயலவேண்டும் என்பது கிடையாது. அதற்காக கவலையும் படவேண்டியதில்லை. நெகிழ்வுத்தன்மையோடு இருங்கள். நன்றாக தூங்குங்கள், காபி குடியுங்கள். நடியுங்கள்.
மேகன் மெக்லஸ்கி
டைம் வார இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக