இடுகைகள்

அறிவியல்- பேட்டரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாதாரண பேட்டரிகளை பின்னுக்கு தள்ளும் நியூக்ளியர் பேட்டரி!

படம்
நியூக்ளியர் பேட்டரி ! நிப்பான் , எவரெடி என பேட்டரிகளை அடிக்கடி மாற்றி சலித்திருப்பீர்கள் . ஆனால் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ( அ ) நூறாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றினால் எப்படியிருக்கும் ? அத்தகைய திறனுடைய நியூக்ளியர் பேட்டரியை மாஸ்கோவைச் சேர்ந்த ரஷ்ய விஞ்ஞானிகள் (MIPT) நிக்கல் -63 வை அடிப்படையாக கொண்டு தயாரித்திருக்கிறார்கள் . betavoltaics எனும் கதிரியக்கதை உமிழும் பேட்டரியில் எலக்ட்ரான் மற்றும் போசிட்ரோன்களை உமிழும் செயல்முறையில் மின்சாரம் கிடைக்கிறது . ஆனால் இதில் தேக்கிவைக்கும் மின் அடர்த்தி மிக குறைவானது . பேட்டரியை மாற்றாமல் பயன்படுத்தும் விண்வெளிக்கலங்கள் , பேஸ்மேக்கர் ஆகியவற்றில் நியூக்ளியர் பேட்டரிகளை பயன்படுத்தமுடியும் . ஸ்ட்ரான்டியம் , நானோட்ரிட்டியம் (20 ஆண்டுகள் ) பேட்டரிகள் அதிக ஆண்டுகள் மின்சக்தியை தருகின்றன . MIPT, TISNCM ஆகிய அறிவியல் இன்ஸ்டிடியூட்டுகள் நிக்கல் -63( 1 மைக்ரோவாட் சக்தி ) தனிமம் மூலம் நூறாண்டுகளுக்கு மின்சக்தி கிடைக்கும் பேட்டரியை தயாரித்துள்ளனர் . எலக்ட்ரோகெமிக்கல் பேட்டரிகளைவிட பத்து மடங்கு சிறந்தது என இதனைக்கூறுகிறது வல்லுநர்கள்

3டி பேட்டரியில் ஸ்பெஷல் என்ன?

படம்
3 டி பேட்டரி ! கேதோடு ஒருபுறமும் அனோடு ஒருபுறமும் அமைந்து பெரும்பாலான பேட்டரிகள் இருக்கும் . தற்போது 3 டி சுருள் டிசைனில் கார்னெல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள பேட்டரி வேகமாக சார்ஜ் செய்யும் விதத்தில் உள்ளது .   இதற்கு முன்னர் இவர்கள் உருவாக்கிய பேட்டரி கிராபீன் மூலமும் , தற்போதைய தயாரிப்பு மெல்லிய கார்பன் பொருட்கள் கொண்டும் உருவாகியுள்ளது . PEDOT எனும் பாலிமரும் பயன்படுத்தப்பட்டுள்ளது . " புதிய 3 டி வடிவம் மின்சார இழப்பு பிரச்னையைத் தீர்க்கும் . தற்போதைய பேட்டரியை விட மின்சாரத்தை கிரகிக்கும் ஆற்றலும் 3 டி பேட்டரியில் அதிகம் " என்கிறார் ஆராய்ச்சியாளரான உல்ரிச் வைஸ்னர் . தற்போது இந்த தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெறும் முயற்சி நடைபெற்று வருகிறது .