சாதாரண பேட்டரிகளை பின்னுக்கு தள்ளும் நியூக்ளியர் பேட்டரி!
நியூக்ளியர் பேட்டரி!
நிப்பான், எவரெடி
என பேட்டரிகளை அடிக்கடி மாற்றி சலித்திருப்பீர்கள். ஆனால் பத்தாண்டுகளுக்கு
ஒருமுறை (அ) நூறாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றினால்
எப்படியிருக்கும்? அத்தகைய திறனுடைய நியூக்ளியர் பேட்டரியை மாஸ்கோவைச்
சேர்ந்த ரஷ்ய விஞ்ஞானிகள்(MIPT) நிக்கல்-63வை அடிப்படையாக கொண்டு தயாரித்திருக்கிறார்கள்.
betavoltaics எனும் கதிரியக்கதை உமிழும் பேட்டரியில் எலக்ட்ரான் மற்றும் போசிட்ரோன்களை உமிழும்
செயல்முறையில் மின்சாரம் கிடைக்கிறது. ஆனால் இதில் தேக்கிவைக்கும்
மின் அடர்த்தி மிக குறைவானது. பேட்டரியை மாற்றாமல் பயன்படுத்தும்
விண்வெளிக்கலங்கள், பேஸ்மேக்கர் ஆகியவற்றில் நியூக்ளியர் பேட்டரிகளை
பயன்படுத்தமுடியும். ஸ்ட்ரான்டியம், நானோட்ரிட்டியம்(20
ஆண்டுகள்) பேட்டரிகள் அதிக ஆண்டுகள் மின்சக்தியை
தருகின்றன. MIPT, TISNCM ஆகிய அறிவியல் இன்ஸ்டிடியூட்டுகள் நிக்கல்
-63( 1 மைக்ரோவாட் சக்தி) தனிமம் மூலம் நூறாண்டுகளுக்கு
மின்சக்தி கிடைக்கும் பேட்டரியை தயாரித்துள்ளனர். எலக்ட்ரோகெமிக்கல்
பேட்டரிகளைவிட பத்து மடங்கு சிறந்தது என இதனைக்கூறுகிறது வல்லுநர்கள் வட்டாரம்.