அடித்தால் உதைத்தால் சந்தோஷம்!









Image result for takanakuy fighting festival





பிட்ஸ்!


Image result for takanakuy fighting festival




உலகிற்கு தேவையான பாதம் பருப்புகளில் 82% அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா நகரில் விளைவிக்கப்பட்டு பெறப்படுகிறது.

1979 ஆம்ஆண்டு அமெரிக்காவின் சான்டியாகோவில் பிரெண்டா ஸ்பென்சர் என்ற பள்ளி மாணவி துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் எட்டுபேர் காயமுற்றும் இருவர் இறந்தும்போயினர். என்ன காரணம்? எனக்கு திங்கட்கிழமைகள் பிடிக்காது என்று சொன்னார் பிரெண்டா.

2012 ஆம் ஆண்டு இபே தளத்தில் பெண்மணி ஒருவர் சிக்கன் மெக்நூகட் என்ற உணவு ஐட்டத்தை 8,100 டாலர்களுக்கு விற்றார். எப்படி? ஜார்ஜ் வாஷிங்டன் முகம்போல உணவு இருந்ததுதான் காரணம்.

சிங்கப்பூரில் கழிவறையை பயன்படுத்திவிட்டு நீர்விட்டு சுத்தம் செய்யாவிட்டால் அபராதம் 150 டாலர்கள்.

ஆண்டுதோறும் டிச. 25 அன்று பெரு நாட்டிலுள்ள கிராமத்தில் Takanakuy என்ற விழாவை கொண்டாடுகின்றனர். ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக்கொண்டு பின் வலிதீர மது அருந்தி புத்தாண்டுக்கு நகர்கின்றனர்.