வன்முறையாளர்களுக்கு ஜிம் வசதி - ஹரியானா அரசு புதுமை
நான் தலித் அல்ல!
அண்மையில் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை
தடுப்புச்சட்டம் தொடர்பாக நொய்டாவில் நடந்த போராட்டத்தில் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த
மக்கள் பலரும் கைதானார்கள். அதில் ஆர்எஸ்எஸ் தலைவரும் டெல்லி
பல்கலைக்கழக பேராசிரியர் ராகேஷ் சின்காவும் அடக்கம்.
என்ன செய்தார்
ராகேஷ் சின்கா? டிவி சேனல்
ஒன்றுக்கு பேட்டி கொடுக்க வந்திருந்தவரை போலீஸ்காரர்கள் போராட்டக்காரர் என்று நினைத்து
கெடுபிடியாக ஜீப்பில் ஏற்றி, செம்மொழியான இந்தியில் திகட்ட திகட்ட
அர்ச்சனை செய்திருக்கின்றனர். நொந்துபோன சின்கா "நான் தலித்தல்ல, போராடவும் வரவில்லை" என ஐடிகார்டை கொடுத்து காலில் விழுந்து மன்றாட விடுதலை கிடைத்திருக்கிறது.
பின்னர் சமூக வலைதளத்தில் கைது செய்யப்பட்டவர்களை இப்படி நடத்துவார்கள்
என கனவிலும் நினைத்ததில்லை என சுய அனுபவம் பகிர்ந்துள்ளார் பேராசிரியர் ராகேஷ் சின்கா.
எலிப்புழுக்கைக்கு அங்கே என்ன வேலை?
2
விட்டுக்கொடுக்கிறதா
இந்தியா?
அண்மையில் இந்தியாவின்
சுகாதாரத்துறையும்,
உலக சுகாதாரநிறுவனமும் இணைந்து பங்கேற்ற விழாவில் வெளியிட்ட இந்தியாவின் வரைபடத்தில் இல்லாததோடு,
சீனாவுக்கு உரிமையானதாக அக்சாய் சின் பகுதியையும் அச்சிட்டு வெளியாகி
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின்(WHO) அங்கீகாரத்துடன் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள இந்த மேப், பேரழிவுகள், நோய்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்களைப்
பற்றிய தகவல்களுக்கானது. இதில் சீனாவினுடையது என குறிப்பிட்ட
அக்சாய் சின் பகுதி, லடாக்கிற்கு சொந்தமானது என இந்தியா கூறிவரும்
நிலையில் அதன் அமைச்சகத்திலிருந்தே வெளியாகியுள்ள
சீனாவுக்கு ஆதரவான மேப் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. மேலும் கிழக்கு காஷ்மீர் பகுதி சீனாவினுடையதாக காட்டப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கலந்துகொண்ட விழாவில்தான் இப்படியொரு தவறான வரைபடம் வெளியாகியுள்ளது.
நாட்டை அந்நியரிடம் விட்டுக்கொடுப்பதுதான் தேசபக்தியா? என மோடிதான் சொல்லவேண்டும்.
3
வன்முறையாளர்களுக்கு
ஜிம் தேவை!
ஹரியானாவில் கோசாலை, சிறைக்கைதிகளுக்கு
பசு தெரபி உள்ளிட்ட புரட்சிகர திட்டங்களுக்கு அடுத்தபடியாக அரசு தொடங்கும் புதிய ஜிம்களில்
சங் பரிவாரங்கள் உடற்பயிற்சி செய்யவிருக்கின்றனர்.
ஹரியானாவில் பன்ச்குலாவில்
புதிய ஜிம்மை தொடங்கி வைத்த விவசாயத்துறை அமைச்சர் ஓம்பிரகாஷ் தன்கர், "கிராம பஞ்சாயத்துகளில் இரண்டு ஏக்கர் பரப்பில் அமையும் உடற்பயிற்சிக்கூடங்களில்
யோகா, மல்யுத்தம் ஆகியவை பயிற்றுவிக்கப்படும்" என்று பாலீஷாக பேசினார். ஆனால் கல்வியமைச்சர் ராம்விலாஸ்
சர்மா, சிறிதும் அஞ்சவில்லை. "அதிரடியாக
ஆர்எஸ்எஸ் ஷாகா வகுப்புகள் இங்கு நடைபெறும்" என்று பேசிவிட்டார்.
இதற்கு விளையாட்டுத்துறை, உணவுத்துறை ஆகிய அமைச்சர்களும்
ஆதரவு தெரிவித்துள்ளனர். பிளான் செய்த ஆயிரம் ஜிம்களில்
300 தற்போது திறப்புவிழா கண்டிருக்கின்றன. "ஆர்எஸ்எஸ் உடற்பயிற்சி செய்ய அரசு பணத்தை ஏன் செலவு செய்யவேண்டும்"
என காங்கிரஸ் எம்எல்ஏ கரன்சிங் தலால் எழுப்பிய கேள்விக்கு அரசு இதுவரை
பதில் கூறவில்லை.