காஷ்மீரில் ராணுவப்படைகள் குவிக்கப்படுவதன் காரணம் என்ன?


Related image





ராணுவக்காலனியாகும் காஷ்மீர்!


Related image




மே 16 அன்று ரம்ஜான் பண்டிகையையொட்டி தன் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளதாக கூறிய இந்திய அரசு, ஒருவாரத்திற்கு முன்பாகவே பத்தாவது ராணுவ பிரிவாக எனஎஸ்ஜி படையைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டது.

கட்டிடங்களில் மறைந்துள்ள தீவிரவாதிகளை அழிப்பதற்கான சிறப்பு பயிற்சியை என்எஸ்ஜி கமாண்டோக்கள் பெற்றுள்ளனர். தீவிரவாதிகளின் எழுச்சி எங்கள் வீரர்கள் முறியடிப்பார்கள் என என்எஸ்ஜி தலைவர் சுதீர் லக்தாகியா பேட்டியளித்துள்ளார். இந்திய அரசு காஷ்மீரை படைகளுக்கான பயிற்சி களமாக பார்க்கிறது. முன்பு கருட் கமாண்டோக்கள், தற்போது என்எஸ்ஜி வீரர்கள் என அணிவகுப்பது அதை உறுதிப்படுத்துகிறது.


"கல்வீச்சு தாக்குதல்கள் நிகழ்ந்து வரும் காஷ்மீர் நிலத்திற்கு காயங்களை ஆற்றும் கரங்களே தேவை. படைகளை அனுப்பி பயிற்சி தருவதை கைவிட்டு புதுவித அணுகுமுறையை அரசு கையாளவேண்டும்" என்கிறார் மூத்த பாதுகாப்புபடை அதிகாரி ஒருவர்