மாற்றுப்பாலினத்தவர்களுக்கும் வேலை!
மாற்றுப்பாலினத்தவர்களுக்கும்
வேலை!
டெக் திறமைசாலிகள்
பலரும் வேலையில்லாமல் தவிக்கும் நிலையில் இத்திறன்களற்ற சமூக புறக்கணிப்புக்கு உள்ளாகும்
மாற்றுப்பாலினத்தவர்கள் நிலைமை என்ன? அவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சியளித்து
வேலைவாய்ப்பை சென்னையைச் சேர்ந்த நீலம் ஜெயின் வழங்கிவருகிறார்.
பெரிஃபெரி எனும்
ஸ்டார்ட்அப் நிறுவனம் மூலம் மாற்றுப்பாலினத்தவர்களுக்கு இலவச பயிற்சியளித்து அவர்களுக்கு
வேலை வாய்ப்பை பெற்றுத்தருகிறது நிறுவன இயக்குநரான நீலம்ஜெயின் டீம். "விபசாரம், பிச்சை எடுக்காமல் மாற்றுப்பாலினத்தவர்களுக்கு
உதவும் எண்ணத்தில் உருவானதுதான் இம்முயற்சி. மாற்றுப்பாலினத்தவர்களுக்கான
சட்ட உரிமைகளுக்காக போராடும் உமாவை சந்தித்தபின்தான் இந்த பெரிஃபெரி ஐடியா தோன்றியது"
என்கிறார் நீலம் ஜெயின். பன்னாட்டு நிறுவனத்தில்
செய்துவந்த வேலையை கைவிட்டு மாற்றுப்பாலினத்தவர்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தை
நடத்திவருகிறார் நீலம் ஜெயின்.