ஆசிய அமெரிக்கர்களை ஒதுக்கும் ஹார்வர்டு!


Image result for harvard racist



ஹார்வர்டில் தலைதூக்கும் இனவெறி!

Image result for harvard racist




ஆசிய அமெரிக்க மாணவர்களை இனவெறியுடன் நடத்துவதாக 388 ஆண்டுகள் தொன்மையான அமெரிக்க கல்விநிறுவனமான ஹார்வர்டு பல்கலைக்கழகம் சர்ச்சையில் சிக்கியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2000-2015 வரையிலான காலகட்டத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அப்ளை செய்து தேர்வுகள் எழுதினாலும் தனிப்பட்டரீதியில் அட்மிஷன் ரேட்டிங்குகளை ஆசிய மாணவர்கள் குறைவாகவே பெற்றுள்ளனர். இது ஒரு விதியாக உருவாக்கப்படாவிட்டாலும் ஆசிய-அமெரிக்க மாணவர்களை ஹார்வர்டு பல்கலைக்கழகம் பாகுபாடுடன் அணுகுவது 2013 ஆம் ஆண்டே விமர்சிக்கப்பட்டது."ஆசிய அமெரிக்க மாணவர்களின் அட்மிஷன் விகிதம் கடந்த பத்தாண்டுகளில் 29% உயர்ந்துள்ளதுஇதிலிருந்தே மாணவர்களை பாகுபாடுடன் நாங்கள் நடத்தவில்லை என்பது நிரூபணமாகிறது" என்கிறார் ஹார்வர்டு அதிகாரிகளில் ஒருவர்.     



2

இந்துப்பெண்ணுக்கு இறுதிச்சடங்கு செய்த முஸ்லீம்கள்!

கர்நாடகாவின் வித்யாபுரத்திலுள்ள ஜானவஸதி காலனியைச் சேர்ந்த பவானி, திடீர் மாரடைப்பால் இறந்துபோனார். திருமணமாகாத பவானியின் தம்பி கிருஷ்ணா, இறுதிச்சடங்கு செய்ய உறவினர்களை அழைத்தும் யாரும் உதவ முன்வரவில்லை. பணமின்றி தவித்த கிருஷ்ணாவின் மீது பரிதாபப்பட்ட அருகிலிருந்த இஸ்லாமியர்கள் ஷாகத் மற்றும் நண்பர்கள் நிதிதிரட்டி பவானியின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்தனர். .

அங்கன்வாடி ஊழியர்களான ராஜேஸ்வரி, உள்ளூர்காரர்களான ஷபியா, ஜூபைதா ஆகிய பெண்களை உடலை குளிப்பாட்டி இறுதிச்சடங்குக்கு தயார் செய்திருக்கின்றனர். "சாதி, மதம் என்பதை தடையாக நினைக்கவில்லை. இறந்தவர்களின் கடைசிப்பயணம் நிம்மதியானதாக கௌரவமானதாக அமையவேண்டும் என்பதற்காகவே நண்பர்கள் இணைந்து வேலைசெய்தோம்" என்கிறார் ஷாகத்தின் நண்பரான ஃபாரூக்.