வீக்எண்ட் கலாட்டா- புஷ்அப் சேட்டை!



Related image




பிட்ஸ்!



Image result for brahmanandam


டீ டெலிவரி!

லக்னோவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான டெக் ஈகிள் டீயை டெலிவரி செய்யும் பிசினஸை தொடங்கியுள்ளது. 2 லிட்டர் டீயை பத்து கி.மீ தூரம் ஜிபிஎஸ் வசதி மூலம் கொண்டு செல்ல முடியும். தற்போது இந்திய அரசு ட்ரோன் விமானங்களுக்கான விதிகளை உருவாக்கி வருகிறது.

அதிபரின் எழுத்துப்பிழை!

அமெரிக்காவின் அட்லாண்டாவைச் சேர்ந்த யூவொன்னே மேஷன் என்ற ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியர் ஒரு கடிதத்தை திருத்தி செலிபிரிட்டியாகி உள்ளார். வெள்ளை மாளிகை அதிபர் ட்ரம்பர் எழுதிய கடிதம்தான் அது.ஏராளமான ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகளை திருத்தி கடிதத்தை அதிபர் மாளிகைக்கு அனுப்பியதோடு இணையத்திலும் பகிர்ந்து லைக்ஸ்களை அள்ளியுள்ளார் மேஷன்.

புஷ்அப் சேட்டை!

அண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன்சிங் ரத்தோர் ஃபிட்னெஸ் சவாலை இணையத்தில் தொடங்கிவைத்தார். விராட்கோலி, மோடி உட்பட பலரும் இச்சவாலை ஏற்றுள்ளனர். பெட்ரோல் விலை உச்சம் தொடும் நேரத்தில் ஃபிட்னெஸ் சவாலை மாற்றி கேரளாவில் சேட்டன்கள் பெட்ரோல் பங்க் முன் புஷ்அப் எடுத்தது இணையத்தில் செம ஹிட்.

ரியல் சிலந்திமனிதன்!

பிரான்சில் மாமோடு கஸாமா என்ற அகதி இளைஞர் தெருவில் நடந்துபோய்க்கொண்டிருக்கும்போது கட்டிடத்திலிருந்து அலறல் ஒலி கேட்டது. நிமிர்ந்து பார்த்த கஸாமா, பிளாட்டின் மாடியில் குழந்தை கீழே தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். உடனே நாலுமாடியை நானோ நொடியில் தொற்றி மேலேறி குழந்தையைக் காப்பாற்றிய வீடியோ உலகமெங்கும் ட்ரெண்டிங். பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கஸாமாவுக்கு குடியுரிமை அளிப்பதாக அறிவித்துள்ளார்.  


பிரபலமான இடுகைகள்