அதிகரிக்கும் ரேஞ்சர்களின் கொலை!
வனங்களில் பலியாகும் ரேஞ்சர்கள்!
கடந்த பிப்.20,
2017 அன்று இரவு உணவுக்கு பிறகு டீ அருந்திக்கொண்டிருந்த சத்தீஸ்கர்
ரைகார் மாவட்ட ரேஞ்சர் ராம் லேடரின் வீட்டுக்கதவு தட்டப்பட்டது. திறந்த ராம் லேடர் அடுத்தநாள் பிணமாகத்தான் கண்டெடுக்கப்பட்டார். கெலோ ஆற்றில் சட்டவிரோத கொள்ளையை தடுத்த செயலுக்கு ராம் லேடர் கொடுத்த
விலை அவரின் உயிர்.
2017 ஆம் ஆண்டு காங்கோவில் 17, தாய்லாந்து 8 , இந்தியாவில் 28 என வனக்காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதை தேசிய ரேஞ்சர் ஃபெடரேஷன் அறிக்கை
தெரிவித்துள்ளது. 2012-2017 ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் 526
ரேஞ்சர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொலைகளின்
எண்ணிக்கை விகிதம் 31-162% ஆக அதிகரித்துள்ளது. காங்கோ, தாய்லாந்து, கென்யா,
அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை
விடவும் அதிகம்.
வனங்கள் உறிஞ்சும் பசுமை இல்ல வாயுக்களின் அளவு 11.25% மதிப்பு 6 லட்சம்
கோடி. "உலகிலேயே இந்தியாவில் பலியாகும் வனக்காவலர்களின்
எண்ணிக்கை அதிகம்" என்கிறார் ரேஞ்சர் ஃபெடரேஷன் தலைவர்
சீன் வில்மோர்.