பொய் சொல்லும் மோடி!
மக்கள் பணத்தில்
பப்ளிசிட்டி!
மோடி தலைமையிலான
மத்திய அரசு,
விளம்பரங்களுக்கு மட்டும் இதுவரை 4 ஆயிரத்து
343 கோடி ரூபாயை செலவழித்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த
அனில் கல்கலி என்ற சமூக ஆர்வலர், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் அரசின் விளம்பரச்செலவு
குறித்த தகவலைப் பெற்று வெளியிட்டுள்ளார். ஆட்சிக்கு வந்த ஜூன்
2014 - மார்ச் 2015 வரையில் அச்சு ஊடகங்களுக்கு
424.85 கோடியும், காட்சி ஊடகங்களுக்கு
448 கோடியும், வெளிப்புற விளம்பரங்களுக்கு
79.72 கோடியும் செலவழித்துள்ளனர். 2015-16 ஆண்டுகளில்
அச்சு ஊடகங்களுக்கு 510.69 கோடி, காட்சி
ஊடகங்களுக்கு 541.99 கோடி என விளம்பரத்தொகை எகிறியுள்ளது.
கடந்தாண்டு ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டைவிட(2014) செலவிட்ட விளம்பரத்தொகை அதிகம் என்றாலும் முந்தைய ஆண்டோடு(2015) ஒப்பிட்டால் தொகை குறைவுதான். எதிர்கட்சிகள்,சமூகவலைதளங்கள் என பல இடங்களில் அரசின் பப்ளிசிட்டி செயல்பாடுகளுக்கு கண்டனம்
குவிந்ததால் ஏற்பட்ட நெருக்கடியே விளம்பரத்தொகை குறைந்துபோனதற்கு காரணம்"
என்கிறார் சமூக ஆர்வலர் அனில் கல்கலி.
2
பொய் சொல்லும்
மோடி!
சாதாரண பேச்சிலே
புராணக்கதைகளை அறிவியலுடன் மிக்ஸ் செய்து காமெடி செய்யும் பாஜக அரசியல்வாதிகளுக்கு
தேர்தல் பேச்சுகள் காம்ப்ளிமென்டரிதானே? கர்நாடகாவில் மோடி உளறிக்கொட்டிய
தவறான பேச்சுக்களுக்கு டெல்லி மற்றும் கர்நாடாகாவில் அனாமதேயர்கள் மோடிக்கு போஸ்டரே
ஒட்டிவிட்டனர்.
கடந்த சில நாட்களாக
பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுவரும் 'மோடிலாமா' போஸ்டர் எந்த அமைப்பின் கைங்கரியம் என தெரியாமல் காவல்துறை தடுமாறிவருகிறது.
பெங்களூருவை குப்பை நகரம், தலித் குடியரசு தலைவரான
ராம்நாத் கோவிந்துக்கு காங்கிரஸ் வாழ்த்துகள் கூறவில்லை, பிரதமர்
நேரு ராணுவத்தளபதி கரியப்பாவை அவமதித்தார், 2014 ஆம் ஆண்டு பாஜக
வெற்றிக்கு கைக்கட்சி கங்கிராட்ஸ் சொல்லவில்லை என ஏடாகூட பொய்களை அள்ளித்தெளித்து சென்றார்
பிரதமர் மோடி. மாசடைந்த இந்திய நகரங்களில் பிரதமரின் தொகுதியான
வாரணாசி இடம்பெற்றுள்ள நிலையில் பெங்களூருவை குப்பைகளின் நகரம் சொல்வது முதற்கொண்டு
பல வரலாற்று பிழைகளையும் இணையத்தில் நக்கலடித்து சிரிக்கிறது நெட்டிசன்கள் டீம்.
இணையம் கடந்து தற்போது சுவர்களில் போஸ்டராக ஒட்டப்பட்டு உலகம் முழுக்க
அம்பலப்பட்டுள்ளார் பிரதமர் மோடி.
3
கல்வீச்சினால்
வருமானம் காலி!
இந்தியாவில் சுற்றுலாவாசிகளின்
சொர்க்கமாக திகழும் காஷ்மீரில் தொடர்ச்சியாக நிகழும் கல்வீச்சு, துப்பாக்கிச்சூடு
உள்ளிட்ட வன்முறை தாக்குதல்களால் சுற்றுலாத்துறை படுத்தேவிட்டது.
அண்மையில் போராட்டக்காரர்களுக்கும்
காவல்துறைக்கும் இடையே நடந்த சண்டையில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த திருமணி பரிதாபமாக
இறந்துபோனார்.
"கடந்தாண்டு ஹோட்டல்களில் தங்கும் டூரிஸ்டுகளின் அளவு
40 சதவிகிதம் என்றால் இவ்வாண்டு 17 சதவிகிதத்தை
தாண்டவில்லை" என்கிறார் ஜம்மு-காஷ்மீர்
ஹோட்டல் கிளப்பைச் சேர்ந்த முஷ்டாக் அகமது சயா. கல்வீச்சு,
துப்பாக்கிச்சூடு பிரச்னை இல்லாத சீசனில் காஷ்மீர் மாநிலம் சுற்றுலாவில்
பெறும் வருமானம் ஆண்டுக்கு 1,500 கோடி. சுற்றுலாத்துறையில் காஷ்மீரின் பங்களிப்பு மட்டுமே 7 சதவிகிதம்.
4
வயதானவர்களுக்கு
ஆதரவு!
யூஸ் அண்ட் த்ரோ
பொருட்களைப் போல வயதான பெற்றோரைக் கைவிடும் பிள்ளைகளை சிறையில் தள்ள இந்திய அரசு முடிவு
செய்துள்ளது.
இந்தியாவில் பெற்றோர்களை
தாக்குவதும்,
ஆதரவற்று சாலையில் கைவிடும்
அதிகரித்துவருகிறது. இரக்கமற்று நடந்துகொள்ளும் பிள்ளைகளுக்கு
3 மாத சிறைதண்டனையை ஆறுமாதமாக மத்திய அரசு உயர்த்தவுள்ளது.
இந்திய அரசின் சமூகநலத்துறை 2007 ஆம் ஆண்டு உருவாக்கிய
சட்டத்தில் உயிரியல்ரீதியான பிள்ளைகள், பேரன்கள் மட்டுமே தண்டனைக்குள்ளாகும்
வரைமுறை, தற்போதைய 2018 ஆம் ஆண்டு திருத்தத்தில் விரிவாகியுள்ளது. பெற்றோர்களை பராமரிக்கும் பொறுப்பை ஏற்காத மருமகன், மருமகள்,
பேரன்கள் என அனைவரும் தண்டனை பெறும் வகையில் பெற்றோர் நலம் மற்றும் மூத்த
குடிமக்கள் சட்டம் 2018 தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் பெற்றோர்களுக்கு வழங்கும் மாத பராமரிப்புத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படவுள்ளது. இதுதொடர்பான புகார்களை பெற்றோர்நல
மையத்திடம் அளித்து தீர்வுகளைப் பெறலாம்.