இருட்டைப் பார்க்கும்போது பயம் ஏற்படுவது ஏன்?




Image result for night fear



ஏன்?எதற்கு?எப்படி? Mr.ரோனி

இருட்டைப் பார்க்கும்போது பயம் ஏற்படுவது ஏன்?

கடவுளை நம்புகிறவர்கள், நம்பாதவர்கள் யாராக இருந்தாலும் இருட்டில் கொலுசு சத்தம், பாத்திரம் கீழே விழுவது என ஒலிகள் கேட்டால் வயிற்றுக்குள் கடாமுடா கலவரம் நிகழ்வது நிச்சயம். இரவில் நம்மால் எதையும் பார்த்து உணர முடியாததுதான் பயத்திற்கு முக்கியக் காரணம். பூனைகள்,நாய்களுக்கு பார்வைத்திறன் இரவில் துல்லியம் கூடும் என்பதால் அவை இரவில் விழிப்போடு இருக்கும். இரண்டாவது,
விபரீத கற்பனைகள். இவையே உறக்கம் விழித்தபின்னரும் உடல் எழமுடியாதது போல சூழலை ஏற்படுத்துகிறது. மகிழ்ச்சி, துக்கம், பதற்றம், குற்றவுணர்ச்சி ஆகியவை வெளிப்படுத்தாமல் அடக்கி வைக்கப்படும்போது மனதில் பயம் சூழும் காஞ்சனா வகையறா காட்சிகளை மூளை தயாரிக்கத் தொடங்குகிறது.