செவ்வாயில் தாவரங்கள்!



Image result for mars plants



செவ்வாயில் தாவரங்கள் உண்மையா?

Image result for mars plants


பூமிக்கு மாற்றான உலகம் தேடும் முயற்சியில் செவ்வாயை நாசா இன்றும் விட்டுக்கொடுப்பதாக இல்லை. அண்மையில் செய்த ஆராய்ச்சியில் பருவச்சூழல்களுக்கேற்ப மாறும் மீத்தேன் அளவையும், பாறைகளிலுள்ள தாவர இனங்களைக் குறித்த தகவல்களையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

2012 ஆகஸ்டில் செவ்வாயை ஆய்வு செய்த க்யூரியோசிட்டி ரோவர் மூலம் இத்தகவல்கள் சேகரிக்கப்பட்டிருக்கலாம். உயிரியல் பொருட்களில் நீக்கமற நிறைந்துள்ள மீத்தேன்(2015 கண்டுபிடிப்பு) செவ்வாயின் உயிர்கள் உள்ளன என்கிற நம்பிக்கையை தருகிறது. ஆண்டுதோறும் உயர்வதும் தாழ்வதுமான மீத்தேன் அளவும் எங்கிருந்து உருவாகிறது என்பதற்கான பதிலை ஆய்வாளர்கள் தேடினர். உறைந்த பனிக்கட்டிகள் உருகும்போது மீத்தேன் பெருமளவு உருவாவது கண்டறியப்பட்டுள்ளது. செவ்வாய் குறித்த ஆராய்ச்சியாளர்களின் சிறுசிறு கேள்விகளுக்கு மெல்ல விடைகிடைத்து வருவது நம்பிக்கை தரும் செயல்பாடு.