மரபணு மாட்டின் இறைச்சி நல்லது!


Image result for california researcher alison ennam

மரபணு உணவுகள்!



ஆஸ்திரேலியா பண்ணைகளில் கொம்புள்ள மாடுகளை உரிமையாளர்கள் விரும்புவதில்லை. அதனை அறுத்து எடுப்பது சிரமமாக பசுக்களின் மரபணுக்களில் மாற்றம் செய்து கொம்புகளற்ற பசுக்களை உருவாக்கி வருகிறார் மரபணு வல்லுநர் அலிசன் வான் எனன்னாம். ஆறு பசுக்கன்றுகளை CRISPR முறையைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ளார். தற்போது தொடக்கநிலையிலுள்ள இத்தொழில்நுட்பம் எதிர்காலத்தில் பல்வேறு பருவசூழலில் வளருமாறு பயிர்களை திருத்த உதவக்கூடும்.


கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான அலிசன் உயிரித்தொழில்நுட்பம் மூலம் விலங்குகளை விவசாயத்திற்கேற்ப மேம்படுத்தி வருகிறார். The Dr. Oz Show  நிகழ்ச்சியில் மரபணு மாற்றப்படுவது குறித்த மக்களின் சந்தேகங்களுக்கு நேரடியாக பதிலளித்தது இவரின் அறிவியல் நேர்மைக்கு சான்று."அறிவியலின் தொழில்நுட்பத்தை அனுகூலமாக பார்க்கும் பார்வை முக்கியம்" என்பவரின் மரபணு ஆராய்ச்சிக்கு அமெரிக்க விவசாயத்துறை நிதியுதவி அளிக்கிறது. மரபணுவை திருத்தி பசு இறைச்சியையும் அதிகரிக்க முடியும். SRY எனும் மரபணுவை பசுக்களின் உடலில் செலுத்தி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார் அலிசன்.


பிரபலமான இடுகைகள்