கருக்கலைப்புக்கு அனுமதி!




Image result for abortion law ireland


கருக்கலைப்புக்கு அனுமதி!

Related image


அண்மையில் அயர்லாந்து கருக்கலைப்பு தடைக்கு எதிரான சட்டத்தை நீக்க வாக்கெடுப்பு நடத்தியது. அதில் சட்டத்தை நீக்க 66.4 சதவிகித மக்கள் வாக்களித்துள்ளனர். மக்களின் முடிவை வரவேற்று டப்ளின் கேஸ்டிலில் உரையாற்றி பிரதமர் லியோ வராத்கர், "பெண்களுக்கு முடிவு எடுப்பதற்கான வாய்ப்புக்களை தருவதன் மூலம் நம்பிக்கை மற்றும் மரியாதையை உருவாக்க முடியும். இனியும் பெண்கள் நாட்டின் பெயரால் அவமானப்படவேண்டியதில்லை. இது வரலாற்று சிறப்பான முடிவு" என்று பேசினார்.
ஓரினச்சேர்க்கையாளரான லியோ வராத்கர் பிரதமராக தேர்வு பெற்றது கத்தோலிக்க நாடான மாறிவரும் அயர்லாந்துக்கு சான்று என்பதை கருக்கலைப்பு தடைக்கு எதிரான வாக்கு சதவிகிதம் உறுதி செய்துள்ளது. 1983 ஆம் ஆண்டு உருவான எட்டாவது சட்டத்திருத்தத்தை மக்களின் வாக்கு செயலிழக்க செய்துள்ளது.  2012 ஆம் ஆண்டு வயிற்றில் இறந்துபோன குழந்தையை வெளியே எடுக்க அயர்லாந்து சட்டம் அனுமதிக்காததால் இறந்து சவிதா ஹாலப்பனார் இச்சட்டத்தை ஒழிக்க முக்கியக்காரணம். கத்தோலிக்க சர்ச்களின் ஊழலும் மக்களின் மத்தியில் தோற்றுவித்த அவநம்பிக்கையும் அதனை வீழ்த்தியுள்ளது என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.