ஸ்டார்ட்அப் மந்திரம் 5!-மொபைலில் கைமாறும் பணம்!
ஸ்டார்ட்அப் மந்திரம்!
மொபைலில் கைமாறும் பணம்! - மாத்தியோசி
மொபைலில்
பேசுவது தாண்டி யாரும் யோசிக்காத நேரத்தில் பேடிஎம், மொபிவிக்
எப்படி முளைத்து வாடிக்கையாளர்களை கவர்ந்தன? தொழில்நுட்பத்தின்
விளைவாக அனைவரின் கைகளிலும் வந்துவிட்ட ஸ்மார்ட்போன்கள்தான் முக்கிய காரணம்.
அங்குமிங்கும் அலையாமல் அனைத்தையும் சில தொடுதிரை ஸ்வைப்புகள் மூலமே
செய்துவிட்டால் சூப்பர்தானே! சின்ன கனவுதான். ஆனால் இன்று சாத்தியமாகியுள்ளது. பணமதிப்புநீக்க நடவடிக்கையின்போது
பொருட்களை வாங்க, பிறருக்கு பணம் அனுப்ப பேடிஎம், மொபிவிக் போன்ற அப்ளிகேஷன்கள்தான் உதவின.
செமிகண்டக்டர்
துறையில் வேலை செய்து சலித்துப்போன ஒரு நொடியில்தான் வேலையை விட பிபின் ப்ரீத் சிங்
முடிவு செய்தார். வேறெதாவது சவாலான வேலையைச் செய்யலாமே
என தீர்மானித்திருந்தபோது பேபால் நிறுவன ஊழியரான உபாசனா தாகுவை ஒரு நிகழ்வில் சந்தித்தார்.
இருவரின் சிந்தனைகளும் ஒரே பாதையில் இணைய தம்பதிகளானார்கள். ஆன்லைனில் மொபைல் ரீசார்ஜ்தான் முதல் இலக்கு. பிறகு மார்க்கெட்டை
ஆராய்ந்தபிறகு வளமான எதிர்காலம் இருப்பதை பிபின் உணர்ந்தார்.