செவ்விந்தியர்களை அழித்த ஆய்வாளர்!

Image result for american indigenous tribes



செவ்விந்தியர்களை அழித்த ஆய்வாளர்!

1838 ஆம் ஆண்டு க்யூபாவில் பிறந்த ஃபிளெச்சரின் தந்தை நியூயார்க்கில் வழக்குரைஞர். உடல்நல பிரச்னைக்காக கரீபியன் தீவுகளுக்க சென்றனர். தந்தை இறந்த ஓராண்டுக்குப்பின் ப்ரூக்ளினுக்கு தாயுடன் திரும்பிய ஃபிளெச்சர் பள்ளிப்படிப்பை முடித்து குழந்தைகளுக்கு வீட்டில் பாடம் சொல்லித்தரும் ஆசிரியையாக செயல்பட்டார். 1870 ஆம் ஆண்டில் Sorosis என்ற பெண்கள் அமைப்பில் இணைந்தார். தன்னுடைய நண்பர்கள், அந்தஸ்தை பயன்படுத்தி செவ்விந்தியர்கள் குறித்த மானுடவியல், தொல்லியல் ஆகிய துறைகளில் இறங்கினார்.
 Image result for american indigenous tribes

ஹார்வர்டைச்சேர்ந்த எஃப்.டபிள்யூ புட்னம் என்பவரிடம் அனுமதி பெற்று ஆய்வைத் தொடங்கினார். அமெரிக்க அரசு ஒமஹா, சியாக்ஸ் பிற பழங்குடிகளிடம் நிலத்தை பறிக்க முயற்சித்துவந்தது. ஒமஹா கலாசார தகவல்களை பழங்குடித்தலைவரின் மகளான லா பிளெச்சே, அவரது கணவர் தாமஸ் ஹென்றி வழங்கினர். பிளெச்சர் நினைத்தபடி அரசு நிலங்களை வழங்காமல் பழங்குடிகளின் நிலங்களை பறிக்க டேவிஸ் என்ற சட்டத்தை 1887 ஆம் ஆண்டு நிறைவேற்றியது. இதற்கு தூதராக செயல்பட்டதே ஃபிளெச்சர்தான். தனது செயல் பற்றி அணுவளவும் கவலைப்படாத ஃபிளெச்சர் பழங்குடி பாடல்களையும் நடனத்தையும் பதிவு செய்து வந்தார். ஆனால் இந்த ஆராய்ச்சிக்கு உதவியாளராக உதவிய லா பிளெச்சேவின் பெயரை எங்குமே குறிப்பிடவில்லை என்பது ஃபிளெச்சரின் குணநலனை சொல்லாமல் சொல்லும். பிளெச்சரின் நூல்கள் லைப்ரரி ஆஃப் காங்கிரசில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.