கோப்ராபோஸ்ட்டின் துணிச்சலான முயற்சி!

முத்தாரம் Mini
Image result for cobrapost operation 136 

ஸ்டிங் ஆபரேஷன்கள் எதற்காக?

பத்திரிகையாளர்களின் செய்தி என்பது தீர்க்கமான ஆதாரங்களிலும் உண்மையிலும் எழுந்துநிற்பவை. ஆனால் ஊடக நிறுவனங்கள் சில இதுபோன்ற திடுக்கிடும் செய்திகளை மறுக்கும்போது ஸ்டிங் ஆபரேஷன்கள் பிறக்கின்றன. 136 என்பது உலக பிரஸ் ப்ரீடம் பிரஸ் பட்டியலில் இந்தியாவின் இடத்தைக் குறிப்பது. தற்போது இந்தியா 138 ஆவது இடத்திற்கு வந்துவிட்டது.
ஊடக நிறுவனங்களை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்?

அச்சு, காட்சி, இணைய ஊடகங்களை தோராயமாக தேர்ந்தெடுத்து எங்கள் செய்தியாளர் ஊடக உரிமையாளரை, விற்பனை மேலாளரை சந்திக்கிறார். பொதுவாக ரிஷப்ஷனுக்கு போனில் தொடர்புகொண்டு பேசுவார்கள்.

கோப்ரா போஸ்ட் செய்கிற இதுபோன்ற ஸ்டிங் முறைகள் ஊடகத்துறையில் பதற்றத்தை ஏற்படுத்தாதா?

ஊடகம் என்பது மக்கள் பலரும் நம்பிக்கை வைத்திருக்கிற துறை. ஆனால் ஊடகங்களின் ஆசிரியர் பிரிவு என்பது லஞ்சம் பெறுகிறதாக மாறினால் ஜனநாயகத்துக்கு ஆபத்து அல்லவா? நாளிதழ்கள் அரசிடம் மானிய உதவிகள் பெறுவது பொதுமக்களின் சேவைக்காக மட்டுமே.
-அனிருத்தா பாஹல், கோப்ராபோஸ்ட் ஆசிரியர்