குடிநீரில் கலக்கும் கதிரியக்க யுரேனியம்!
யுரேனியம் கலப்படம்!
இந்தியாவிலுள்ள பதினாறு மாநிலங்களின் நிலத்தடி நீரில்
யுரேனியம் உள்ளதாக அமெரிக்காவின் ட்யூக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். குடிநீரில் யுரேனியத்தின் அளவு உலக சுகாதார நிறுவனம் வரையறுத்த அளவைவிட அதிகம்
என்பது நம் கவலைப்படவேண்டிய விஷயம்.
ராஜஸ்தான் மற்றும் குஜராத்திலுள்ள 324
கிணறுகள் மற்றும் பதினாறு மாநிலங்களிலுள்ள குடிநீரில் யுரேனியத்தின்
அளவு அதிகரித்துள்ளது. 30 மைக்ரோகிராம் என்பதே உலக சுகாதார நிறுவனம்
மற்றும் அமெரிக்க சூழல் அமைப்பு ஆகியவை அங்கீகரித்த யுரேனியத்தின் அளவு. நீரில் கலப்படமாகும் பொருட்களின் பட்டியலில் இந்தியா யுரேனியத்தை இன்னும் சேர்க்கவேயில்லை.
மனிதர்கள் நைட்ரேட் பயன்பாட்டினால் பூமியின் பாறைகளிலுள்ள யுரேனியம்
மெல்ல நீரில் கரைந்து அதனை அருந்தும் மக்களுக்கு புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மூளை, இதயம், சிறுநீரகம்,
தைராய்டு ஆகிய பகுதிகளை பாதிக்கும் யுரேனியம், ஈறுகளில் ரத்தம் வடிதல், சிறுநீரக நோய்கள், மலட்டுத்தன்மை, ஆஸ்டியோபோரோசிஸ், நோய்எதிர்ப்பு சக்தி குறைவு ஆகிய பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.