டைம் பத்திரிகையின் நம்பிக்கைக்குரிய நாளைய இளைஞர்கள்!



Image result for Sonita Alizadeh(21)

நம்பிக்கை மனிதர்கள்!


Image result for Sonita Alizadeh(21)

Image result for Kerstin Forsberg(33

Kerstin Forsberg(33)

Related image


பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது தன் ஒன்பது வயதில் இயற்கை சங்கம் தொடங்கியவர். பெரு நாட்டில் பிளானட்டோ ஓசானோ என்ற என்ஜிஓ மூலம் கடல் மாசுபாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். "கணவாய் மீன்கள் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை இனப்பெருக்கம் செய்யும் நிலையில் அதனை வேட்டையாடி உண்பதை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை" என்பவர் அதிகாரிகளிடம் 2 ஆண்டுகளாக போராடியதன் பலனாக தற்போது நடவடிக்கை தொடங்கியுள்ளது.

Sonita Alizadeh(21)

சுதந்திரத்திற்கான குரல். முதல்முறை திருமண உடையை இராக்கைச் சேர்ந்த சோனிடா அணிந்தது மங்கல நாணை  அணிவதற்காக அல்ல; இசை வீடியோவுக்காக. பெண்களின் மௌனத்தை உடைக்க நான் அலறுகிறேன் எனும் சோனிடா, தன்னை 9 ஆயிரம் டாலர்களுக்கு பெற்றோர் விற்க முயன்றபோது Daughters for Sale என்ற ராப் பாடலை எழுதி பாடினார். குழந்தை திருமணத்திற்கு எதிரான தேசியகீதமாக ஒலிக்கிறது அப்பாடல். அப்பாடல் மூலம் அமெரிக்க இசைப்பள்ளியில் இலவசமாக கல்வி கற்க வாய்ப்பு கிடைத்துள்ளது."குழந்தை திருமணத்தை ஒப்புக்கொள்ளாத குற்றத்திற்காக இன்றும் என் தோழிகள் தாக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் கனவுகள் நிறைவேற உதவுவதே என் லட்சியம்" என்கிறார் ராப்மங்கை சோனிடா.


Image result for Ariana Grande(24)


Ariana Grande(24)

உலகின் டாப் 10 பாப் ஸ்டார்களில் அரினா கிராண்டேவுக்கு நிச்சயம் இடமுண்டு.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரிலீசான டேஞ்சரஸ் வுமன் அதிரிபுதிரி ஹிட். 2008 ஆம் ஆண்டு தியேட்டர்களில் நடிக்கத்தொடங்கிய அரினாவின் முதல் சிங்கிள் 2013 ஆம் ஆண்டு வெளியானது. ஆனால் அனைத்தும் மாறியது கடந்த ஆண்டுதான். 2017 ஆம் ஆண்டு மே 22 அன்று இங்கிலாந்தில் நடைபெற்ற கான்செர்ட்டில்  குண்டு வெடித்ததில் 22பேர் பலியானது அரினாவை கடுமையாக பாதிக்க, ஜூன் 4 அன்று இசை நிகழ்ச்சி நடத்தி பலியானவர்களுக்கு 12 மில்லியன் டாலர்களை வசூலித்து கொடுத்திருக்கிறார் பாப்குயில் அரினா.
Image result for Anthony Boyle(24)


Anthony Boyale(24)

அயர்லாந்தைச் சேர்ந்த ஆன்டனி ஹாரிபாட்டர் சீரிசில் நடித்து பெரும் புகழ்பெற்றவர். நடிப்பு கனவை எப்படி வெளிப்படுத்துவது என தத்தளித்த ஆன்டணி தன் பத்தொன்பது வயதில் ராயல் வெல்ஸ் இசை மற்றும் நாடக கல்லூரியில் சேர்ந்தபின்தான் வாழ்வில் வெளிச்சம் வந்தது. ஹாரிபாட்டர் நாடகத்தில் இவரின் ஸ்கார்பியஸ் கதாபாத்திரத்தின் சிறப்பான பங்களிப்பிற்காக ஆலிவர் விருதைப் பெற்றிருக்கிறார்