சிரியாவில் பூனை டாக்டர்!
சிரியாவில் பூனை
டாக்டர்!
சிரியாவில் நடைபெற்றுவரும்
உள்நாட்டுப்போரினால்
3 லட்சத்து 50 ஆயிரம் பேர் பலியாகிவிட்டனர்.
இதோடு இடம்பெயர்ந்து அகதிகளான மக்களின் எண்ணிக்கையும் அதிகம்.
24 நகரங்களில் மக்களால் கைவிடப்பட்ட வளர்ப்பு பிராணிகளை முகமது அலா அல்
ஜலீல் என்பவர் தன் காப்பகம் மூலம் காப்பாற்றிவருகிறார்.
ஆன்லைன் நிதியுதவிகள்
மூலம் 170
பூனைகளை பராமரித்து காப்பாற்றிவரும் ஜலீலுக்கு ஆலப்போவின் பூனை மனிதர்
என்ற பெயரும் உண்டு. 2011 ஆம் ஆண்டு போர் தொடங்க காயமுற்ற பூனைகளை
காப்பாற்றி சிகிச்சையளிக்க தொடங்கியவர் இதற்காக தொடங்கிய க்ளினிக்குடன் இணைந்த காப்பகத்தின்
பெயர்தான் எர்னஸ்டோ. "பூனைகள் மட்டுமல்ல குதிரைகள்,
பசு ஏன் கோழிகளுக்கு கூட இலவசமாக சிகிச்சையளிக்கிறோம்" என்கிறார் ஜலீல். அதேநேரம் நிறைய பிராணிகளுக்கு காயம்
தீர சிகிச்சை அளிக்க மருந்துகள் தட்டுப்பாடு உள்ள நிலையில் அதனை காப்பாற்ற மெனக்கெடும்
ஜலீலுக்கு பாராட்டுகள் குவிகின்றன.