நாயின் உடல்மொழி என்ன சொல்கிறது?
ஏன்?எதற்கு?எப்படி?-Mr.ரோனி
முன்காலை தாழ்த்தி
உடலை பின்னோக்கி இழுக்கும் நாயின் உடல்மொழியை எப்படி புரிந்துகொள்வது?
காட்டில் இருந்த
நாயின் முன்னோர்களான ஓநாய்கள் இரையை கொன்று தின்னும் முன்பு மேற்சொன்ன உடல்மொழியை பின்பற்றும். பின்னாளில்
வீட்டு விலங்காக அதன் வம்சாவளியாக நாய்கள் வந்தபின் இந்த உடல்மொழிகள் மரபின் வழியாக
அப்படியே வந்துவிட்டன. இன்னொரு சக நாயுடன் இணக்கமாக உரையாட இந்த
உடல்மொழியை நாய்கள் கைக்கொண்டு மெல்ல பொய்க்கடி கடித்து உருண்டு புரண்டு விளையாடி மகிழும்.
டென்ஷனிலுள்ள தன் எஜமானரை பந்துகளை வீசி எடுத்துவரவும், கைகளை மெல்ல நக்கி விளையாட அழைப்பதும் இந்த வகையில்தான். இதைப்படித்துவிட்டு நாயின் முன்பு பிஸ்கட்டை வீசுவதாக ஏமாற்றி அம்பியாய் கடிவாங்கினால்
கம்பெனி பொறுப்பல்ல.