செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம்- விக்டர் காமெஸி
AI:பயங்கள்
ஏன்? - விக்டர் காமெஸி
செயற்கை நுண்ணறிவு
என்பது எதிர்காலத்திற்கான டெக் நுட்பம். ஏடிஎம்மில் பணம் ஒருவர் எடுத்தால்
அதைக் கண்டறிவது, போக்குவரத்து நெரிசலை ஆப் மூலம் கண்டறிவது,
இணையத்தில் வாங்கும் பொருட்களின் வரலாற்றைக் கொண்டு அடுத்து தேவையான
பொருட்களை விளம்பரப்படுத்துவது, ரயில் பயணத்திற்கு புக் செய்தால்
தாமதமாகும் ரயிலைக் குறிப்பிட்டு மெசேஜ் அனுப்புவது என தினசரி நாட்களை எளிமையாக்கும்
தொழில்நுட்பம்தான் ஏஐ.
1950 ஆம் ஆண்டிலேயே கணினிகளால் யோசிக்க
முடியுமா என்ற கேள்வியை ஆராய்ச்சியாளர் ஆலன் டூரிங் முன்வைத்தார். பின்னர் 1956 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூ ஹாம்ஷையரில்
ஆலன் நியூவெல், ஹெர்மன் சைமன், ஜான் மெக்கார்த்தி
ஆகியோர் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆராய்ச்சியை தீவிரமாக தொடங்கிவைத்தனர். சைமன் மற்றும் நியூவெல் ஆகியோர் ஏஐ
இயக்கத்திற்கான அடிப்படை தியரியை உருவாக்கினர். இன்று ஐடி,
வங்கி, சூப்பர் மார்க்கெட், மருத்துவம் என பல்வேறு இடங்களிலும் ஏஐ செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
எய்ம்ஸ், ஐஐடி ஆகிய இடங்களில் நோயாளிகளின் டேட்டாவை
சேகரிக்கும் வரை ஏஐ பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. 2020 ஆம் ஆண்டில்
1.8 மில்லியன் வேலைவாய்ப்புகளை குறைத்து 2.3 மில்லியன்
வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என கார்ட்னர் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
மனிதர்களை ஐபிஎம்மின் டீப் ப்ளூ கம்ப்யூட்டர் ஏஐ போல சில விளையாட்டுகளில்
ஜெயிக்கலாம். ஆனால் இவை பயிற்சியால் உருவானவை.
உலகத்தின் பல்வேறு
இடங்களிலுள்ள மொழியை அதன் உச்சரிப்பு வேறுபாட்டுடன் புரிந்துகொள்வதே ஏஐயின் அடுத்த
பெரிய சவால்.
ரீசனிங் முறையில் செஸ் விளையாட்டை விளையாடும் ஏஐ ஒலியைப் பெற்று புரிந்துகொள்வது
அவ்வளவு எளிதானதல்ல. அமேஸான் அலெக்ஸா, கூகுள்
ஹோம், ஆப்பிள் சிரி ஆகியவற்றின் துல்லியம்
கூடி தவறுகள்
4.9%(2016-2017) குறைந்துள்ளன. பேபால் தனது தளத்தில்
பணபரிமாற்றத்தையும் ஜேபி மோர்கன் கடன் ஆவணங்களை சரிபார்க்கவும் ஏஐ தொழில்நுட்பத்தை
பயன்படுத்தி வருகின்றன.
இதோடு உணவகங்களை இணையத்தின் வழியே கண்டறிய
கேஎஃப்சி, சீனாவின் பைடுவுடன் கூட்டணி அமைத்துள்ளது.
"மனிதர்களை புரிந்துகொண்டு செயல்படுவதுதான் ஏஐயின் அடுத்த திட்டமாக
இருக்கும்" என்கிறார் AAAI ன்அமைப்பின் தலைவரான
சுப்பாராவ் கம்பம்படி.