கன்னடம் தேசியமொழியாக இருந்த காலமும் ஒன்றுண்டு!
நேர்காணல்!
"கன்னட மன்னர்கள் ஆச்சரியப்படுத்துகிறார்கள்"
வசுந்தரா ஃபிளியோசட்,
வரலாற்று ஆய்வாளர்.
தமிழில்: ச.அன்பரசு
கர்நாடகாவின் வரலாறு தொடர்பாக
1960 ஆண்டிலிருந்து ஆராய்ச்சி செய்து வருகிறார் வசுந்தரா. பண்டிதர் சென்ன பசவப்பா கவலி என்பவரின் மகளாக பிறந்த வசுந்தரா, கர்நாடக பல்கலையில் வரலாறு, பிரெஞ்சு, கல்வெட்டியல் படித்தவர். சோர்பன் பல்கலையில் நாடகம் மற்றும்
வரலாறு படிப்பில் முனைவர் பட்டம் வென்றவர் கல்வெட்டியல் குறித்த நூல்களை எழுதியுள்ளார்.
1940 ஆம் ஆண்டு தார்வாடில் உங்களது
வாழ்க்கை எப்படி இருந்தது?
நெகரா(நெசவாளர்)
இனத்தைச் சேர்ந்தது எங்கள் குடும்பம். 1920 ஆம்
ஆண்டில் கன்னடம் மற்றும் சமஸ்கிருதம் கற்ற தந்தை சென்னபசவப்பா, நாடகங்கள் பற்றி தடையின்றி எங்களுடன் உரையாடுவார். ரேடியோவல்
மல்லிகார்ஜூன் கான்செர்ட் நடக்கும்போது எனக்கு இளங்கலை இறுதித்தேர்வு நடக்கவிருந்தது.
தேர்வு அடுத்தாண்டு எழுதிக்கொள்ளலாம்; இந்த இசைநிகழ்ச்சி
முக்கியம் என்று தந்தை கூறியதை தாயும் ஆட்சேபிக்கவில்லை.
வரலாற்றில் ஆர்வம் வந்தது எப்படி?
வரலாறு, தத்துவத்தை காட்டிலும்
என்னை ஈர்த்ததே முக்கியக்காரணம். அப்போது பேராசிரியர் ஜீன் ஃபிளியோஸாட்
ஐகோலிலுள்ள 4, 12 ஆம் நூற்றாண்டு கோயில்களை சுற்றிப்பார்த்துவிட்டு
பிரான்ஸ் திரும்பியிருந்தார். பதாமி, கல்யாணி
சாளுக்கியர்கள் மற்றும் ராஷ்டிரகூடர்கள் ஆகியோரின் கட்டுமானத்தில் உருவான கோயில்களைப்
பற்றி நிறைய கேள்விகள் அவரின் மனதிலிருந்தன. வரலாறு பற்றிய அவரின்
அறிவாற்றலே அவரின் வழிகாட்டுதலில் ஆய்வுப்படிப்பை படிக்க காரணம்.
விஜயநகரத்தின் மீது அப்படியென்ன காதல் உங்களுக்கு?
ஹம்பிக்கு 1962-63 காலகட்டத்தில்
எம்ஏ படித்தபோது சுற்றுலா சென்றோம். அந்த இடத்தில் ஒவ்வொரு இடத்தையும்
புகைப்படமாக பதிவு செய்தேன். அப்போது சிற்பங்களின் மீது தாவரங்கள்
அதிகம் வளர்ந்திருக்கவில்லை. மூன்று நாட்கள் அங்கே சுற்றியபோதே
முனைவர் படிப்புக்கு ஹம்பி பற்றி படிப்பது என தீர்மானித்துவிட்டேன்.
உள்ளூர் மொழியையும் கலாசாரத்தையும வரலாற்று ஆய்வாளர்
அறிந்திருப்பது அவசியமா?
ஐரோப்பியர்கள் இந்தியாவுக்கு வரும்போது வரலாறு குறித்த
விழிப்புணர்வு இந்தியர்களுக்கு கிடையாது என்று முட்டாள்தனமாக பேசினர். இந்தியர்களின் ஒவ்வொரு கோயில்களிலும் அமைக்கப்பட்ட கல்வெட்டுகளில் பேசப்படாத
வரலாறு என்ன இருக்கிறது? தானமளித்த அரசர், தேதி, யாருக்காக கட்டப்ப்பட்டது, கோயிலின் பொறுப்பாளர் என அத்தனை விஷயங்களையும் அறிந்துகொள்ள முடியும்.
நூல்களில் உள்ளது மட்டுமே வரலாறு என்று திமிராக எண்ணும் அறிவு ஆங்கிலேயர்களுடையது.
உள்ளூர் கலாசாரம் மொழியை அறியாதவர்கள் சங்கமா காலகட்ட கல்வெட்டுகளைக்
கூட தெலுங்கு மொழி என புரிந்துகொண்டனர். அவர்களின் மொழிபெயர்ப்பும்
கூட மானியத்தை சிறு குறிப்பாக எழுதி சென்றதே ஒழிய மானியம் அதன் காரணங்கள் என முழு விவரங்கள்
நூலில் கிடையாது. வரலாற்றை அறிய மானியங்களின் முழு விவரங்கள்
தேவை.
இக்கல்வெட்டுக் குறிப்புகளில் உங்களை ஆச்சரியப்படுத்தியது
எது?
கன்னட மன்னர்களின் தகவல்கள். இவர்களின் தேசிய மொழி தெலுங்கு என்பதை உறுதிபடுத்தமுடியாதபோதும் அதிகாரப்பூர்வ
மொழி கன்னடம்(தேசியமொழி) என்பது ஆச்சரியம்
தந்த செய்தி. தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் தமிழ், தெலுங்கில் தொடங்கும் கல்வெட்டுச்செய்தி மானியத்தகவல்களில் கன்னடம் தென்படுகிறது.
எனவே கன்னடம் தேசியமொழியாக அன்று திகழ்ந்திருக்க வாய்ப்பு அதிகம்.
-நன்றி: Monica Jha,
fountainink.in