"ஜப்பானியர்கள் நோபல் பரிசு பெறுமளவு இன்றும் திறமைசாலிகள்தான்"
முத்தாரம்
Mini
ஜப்பானும் இந்தியாவும் இணைந்து செய்யும் அதிவேக
ரயில் ப்ரொஜெக்ட்டில் என்ன எதிர்பார்க்கலாம்?
ஜப்பானில் 1946 ஆம் ஆண்டு
அதிவேக ரயில் அமைக்கப்பட்டது. எனக்கு அப்போது எட்டு வயது.
0.1% வட்டியில் 50 ஆண்டுக்குள் பணத்தை கட்டும்
வகையில் ரயில்வே திட்டம் தொடங்கப்படவிருக்கிறது. ஜப்பானில் ஏற்படுத்திய
மாற்றத்தை இந்தியாவிலும் அதிவேக ரயில் ஏற்படுத்தும் என நம்புகிறோம்.
உங்களின் ரயில்வே திட்டம் மிக கூடுதலான செலவு என
விமர்சனங்கள் வருகிறதே?
பாதுகாப்பான பயணத்தை அதிவேக ரயில்வே திட்டம் உறுதிசெய்யும். மேலும் வேலைவாய்ப்புகள் மற்றும் வர்த்தகத்தையும் விரிவடையச்செய்ய வாய்ப்பு
உள்ளது. ஜப்பானிய தொழில்நுட்பம் உள்ளூர் மக்களுக்கு எதிர்காலத்தில்
சிறந்த பயனை தரும்.
ஜப்பானின் சோனி வாக்மேன் போன்ற புதிய கண்டுபிடிப்புகள்
ஏன் இன்று வருவதில்லை?
சோனி மற்றும் ஜப்பான் கார்கள் இன்றும் எங்கள் ஜப்பான்
பெருமையின் சின்னங்களாக உள்ளன. இணையம் மற்றும் ஸ்டார்ட்அப்
முயற்சிகளில் ஜப்பானியர்கள் பின்தங்கியுள்ளது உண்மை. அறிவியலில்
பல்வேறு துறைகளிலும் ஜப்பானியர்கள் தம் திறமைக்கு உலக அங்கீகாரமாக நோபல் பரிசு பெற்றுள்ளனர்.
-கெஞ்சி ஹிராமட்சூ, ஜப்பானிய தூதர்.