குழந்தை தொழிலாளர்களின் இறப்பு!
ஜூனியரைக் காப்பாற்றிய
சீனியர்!
என்கவுண்டரில்
சமூக விரோதிகளை கொல்லத்தயாராகும் போலீஸ் உயிரை தியாகம் செய்யவும் ரெடியாக இருக்கவேண்டும்
என்பதை டெல்லி சீனியர் போலீஸ் தன் செயலின் மூலம் உணர்த்தியிருக்கிறார்.
டெல்லியில் நடந்த
என்கவுண்டரில் சப் இன்ஸ்பெக்டர் பிஜேந்தர்சிங் தேஸ்வால் தன் உடலை கவசமாக்கி சீறிய தோட்டாக்களை
தடுத்து தன் ஜூனியர் கான்ஸ்டபிள் குர்தீப் சிங்கின் உயிர் காத்துள்ளார்.25 வயதான
குர்தீப்சிங்குக்கு குழந்தை பிறந்து மூன்றுமாதமாகியுள்ளது. ராஜேஷ்
பார்தி உள்ளிட்ட ரவுடிக்குழுவினர் நான்கு பேர் ஸ்பாட்டில் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் சிறப்பு பிரிவைச் சேர்ந்த எட்டுபேர் காயமுற்றனர். போலீசின் சிறப்பு பிரிவில் பதினைந்து ஆண்டுகளாக பணியாற்றிவரும் பிஜேந்தர்சிங்
தேஸ்வால் இதுவரை இருமுறை குண்டடி பட்டுள்ளார். நட்புக்காக தன்
உயிரையும் கொடுக்க துணிந்த பிஜேந்தரின் வீரச்செயலை போலீஸ் வட்டாரம் புகழ்ந்து பேசிவருகிறது.
மரணவிளிம்பில்
குழந்தைகள்!
உலகம் முழுவதும் 5-17 வயதுக்குட்பட்ட
குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 15.2 கோடி. இதில் 7.3 கோடி குழந்தைகள் மிக ஆபத்தான தொழில்துறைகளில்
பணிபுரிவதாக உலக தொழிலாளர் இயக்கத்தின்(ILO) தகவல் தெரிவிக்கிறது.
சுரங்கம், உரத்தொழிற்சாலை
உள்ளிட்ட இடங்களில் நீண்டநேரம் வேலைபார்க்க வைக்கப்படும் இக்குழந்தை தொழிலாளர்களின்(5-11
வயது) எண்ணிக்கை 2012-2016 காலகட்டத்தில் குறையாதது வளர்ச்சியின் இருள்பக்கத்தைக் காட்டுகிறது.
இச்சூழல் குழந்தைகளின் உடல்,மன நிலையை நிரந்தரமாக
சிதைக்கிறது. தேசியக்குற்ற ஆவண ஆணையத்தின்(NCRB) 2015
அறிக்கையில் 10-14 வயதுக்குட்பட்ட பதினெட்டு குழந்தைகள்
இறந்துள்ளதை பதிவு செய்துள்ளது. பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், ஆந்திரா
ஆகிய இடங்களிலுள்ள சட்டவிரோத மைகா ஆலைகளில் குழந்தைதொழிலாளர்கள் அதிகம் இருப்பதாக ராய்ட்டர்ஸ்
செய்தி நிறுவனம் 2016 ஆம் ஆண்டு வெளியிட்ட தகவல் குறிப்பில் கூறியுள்ளது.