குற்றவாளிகளை திருத்த செக்ஸ் தெரபி!
செக்ஸ் தெரபி!
இந்தியாவில் பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை
விதிக்கிறார்கள். அமெரிக்காவில் பாலியல் குற்றவாளிகளுக்கு
செக்ஸ் தெரபியை நீதிமன்றங்கள் பரிந்துரைக்கின்றன. மீ டூ உள்ளிட்ட
விவகாரங்கள் சாதாரண மனிதர்கள் போலவே பிரபலங்களின் பெயர்களும் வெளிவரத்தொடங்கியுள்ள
நிலையில் இது முக்கியமான முயற்சி.
அமெரிக்காவில் பாலியல் குற்றங்களில் 8 லட்சம் பேரின் தகவல்கள் பதிவாகியுள்ளன. நீதிமன்றம் மறுவாழ்விற்காக
வாய்ப்பாக நாடெங்குமுள்ள 2,350 தன்னார்வலர்களான செயல்படும் உளவியல்
நிபுணர்களிடம் சிகிச்சைக்கு பாலியல் குற்றவாளிகளை அனுப்புகிறது. உளவியல் சிகிச்சை சிறையில் அல்லது அரசு நிறுவனங்களில் நடைபெறுகிறது.
மேட், பெண்களிடம் உரையாடுவதில் தயக்கமிருந்தது.
30 வயதான அவருக்கு திருமணம் நிச்சயமாகியிருந்த சமயம். சமூக வலைதளத்தில் சாட்டிங்கில் நட்பான பதினாலு வயது பெண்ணிடம் சூரியனுக்கு
கீழுள்ள அனைத்தையும் பேசினார்; பேசினார்கள். செக்ஸையும்தான். அப்பெண் மேட்டை சந்திக்க வரச்சொல்ல,
வந்தது பெண் அக்கவுண்டில் பேசிய ப்ளூ சைரன் வைத்த போலீஸ்தான்.
ஆளுமைப்பிளவு, மனச்சோர்வுக்கு பயிற்சிபெறுகிறார்
மேட்.
அண்மையில் அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக் டாக்டர் நாசர்,
160 பெண்களிடம் பாலியல் சீண்டல் செய்ததாக எஃப்பிஐ பதிவு செய்த வழக்கில்
175 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. "இந்த வழக்கில் பயன்படுத்தப்பட்ட கடுமையாக சொல்லை எனக்கும் அரசு வழக்குரைஞர்
பயன்படுத்தினார். நான் என் அதிகாரத்தை பயன்படுத்தி யாரையும் காயப்படுத்தவில்லையே?"
என்கிறார் மேட்.
அரசின் பார்வையில் அது குற்றம் எனப்படுகிறது. என்ன செய்வீர்கள்? குற்றம் நடைபெறாமல் தடுப்பதும் அரசின்
கடமைதானே!
ராப் இருபது வயது உல்லாச பேர்வழி. குறைய குறைய ஆல்கஹாலை ஊற்றிக்கொண்டு பார்ட்டி செய்பவர், ஒருநாள் பார்ட்டியில் 15 வயது பெண்ணிடம் உடலுறவு வைத்துக்கொண்டார்.
பெற்றோர்கள் புகார் செய்ய கோர்ட்டிலிருந்து நோட்டீஸ் வந்துவிட்டது.
தெரபியிலும் ராப் தெளிவாக எனக்கு தெரபி அவசியமில்லை என்றே சொன்னார். வழக்கு நடக்கும்போது இரு குழந்தைகளுக்கு தாயான பெண்ணை
திருமணம் செய்துகொண்டார் ராப். இரு குழந்தைகளுக்கும் பதினைந்து
வயது. "பாதிக்கப்பட்ட பெண்ணை பற்றி யோசித்தீர்களா?
மனைவியின் மகள்களுக்கும் அதேவயது என்பது உங்களுக்கு உறுத்தவில்லையா?"
என்றபோது தன் குற்றத்தை ஒப்புக்கொண்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றவுணர்ச்சியால்
காண மறுத்தார். "தன் செயல்களுக்கு ஒருவர் பொறுப்பேற்பதே
உளவியல் சிகிச்சையில் முக்கியமான பகுதி. மனம்திருந்துவது அதுவே"
என்கிறார் உளவியலாளர் செரில்.