பேனாமூடியில் துளையிடப்படுவது ஏன்?





Image result for ballpoint pen with women



பேனாமூடியில் துளை!

Image result for reynolds pen



ரினால்ட்ஸ், ரோரிடோ, செல்லோ, லான்சர் என பால்பாய்ண்டுகள் இங்க் பேனாக்களை முந்தி மார்க்கெட்டை ஜெயித்துள்ளன. அதேசமயம் தீவிர சிந்தனையில் பேனா மூடியில் முறுக்கு பிழிவதை நாமே நிறுத்தாதபோது பள்ளி பொடிசுகள் எப்படி நிறுத்துவார்கள்? திறந்த பால்பாய்ண்டை மூட மூடியை பக்கத்து சீட்டுக்காரரின் பாக்கெட்டில் தேடும் சிட்டிசன்களுக்கு எந்த பிரச்னையில்லை. ஆனால் பள்ளி மாணவர்கள் அதனை விளையாட்டாக விழுங்கிவிடுவது ஆபத்தாக மாறியது.


கிரிஸ்டல் பென்ஸ் என்ற நிறுவனம் பேனா மூடியில் துளையிட்டு விதிகளை பின்பற்றிவருகிறது. ஏன்? ISO 11540 விதிகள் இதனை பரிந்துரைப்பதால்தான். 161 நாடுகளில் பேனா மூடிகளுக்கான துளை விதிகள் அமுலிலுள்ளன. அப்படியிருந்தும் இங்கிலாந்தில் பேனா மூடியை விழுங்கி சிறுவன் இறந்துபோனான். பேனா மூடியை துளையிடுவதால் விழுங்கினாலும் ஒரு நிமிடத்திற்கு 8 லிட்டர் காற்றை சுவாசிக்கமுடியும். அதற்குள் சிகிச்சையளித்து காப்பாற்றவும் வாய்ப்பிருக்கிறது அல்லவா? அதற்காகத்தான். 2012 ஆம் ஆண்டு 1280 சிறுவர்களிடம் செய்த ஆய்வில் 34 பேர் பேனா மூடிகளை தவறுதலாக விழுங்கியது தெரியவந்துள்ளது. 1970 -1984 வரை இங்கிலாந்தில் ஒன்பது சிறுவர்கள் பேனா மூடியை விழுங்கி மூச்சுத்திணறுக்குள்ளாகி காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்

பிரபலமான இடுகைகள்