OZY ஜீனியஸ் 2018 யாருன்னு தெரிஞ்சுக்கோங்க!
ஜீனியஸ் மனிதர்கள்!
SARON MECHALE, BROWN
UNIVERSITY
எத்தியோப்பியாவை
பூர்விகமாக கொண்ட ஷரோன் மிசெல்லின் கோடெஃப் உணவுப்பொருளுக்காக இவர் ஜீனியஸ் வரிசையில்
இடம்பிடித்துள்ளார்.
டெஃப் எனும் எத்தியோப்பிய பாரம்பரிய குளூட்டேன் இல்லாத தானியத்தில் உணவுப்பொருட்களை
தயாரித்து விற்கிறார் ஷரோன். "விவசாயிகள் வாழ்க்கை உயர இத்தொழில்
மூலம் முயற்சிக்கிறேன்" எனும் ஷரோன் ப்ரௌன் பல்கலையில் வணிகம்
பயின்று வரும் மாணவி.
CARLA MARZARI,
UNIVERSITY OF TOLEDO
கார்லா, இணையத்தில்
கோட்வீகோ எனும் தளம் மூலம் ஹெச்டிஎம்எல், சிஎஸ்எஸ், ஜாவா ஆகிய மொழிகளை ஸ்பானிஷ் மொழியில் கற்பிக்கிறார். ஏழை மாணவர்களுக்கு கணினிமொழிகளைக் கற்பிக்கும் நோக்கத்தில் ஆன்லைன் தளத்தை
உருவாக்கியுள்ளார் கார்லா. விரைவில் மாண்டரின் மொழியிலும் கணினிமொழிகளை
உருவாக்க உழைத்து வருகிறார்.
JAMES GRIFFIN,
UNIVERSITY OF TEXAS AT DALLAS
மாணவர்களின் படிப்பு
குறித்த தகவல்களை RamifAI மூலம் தொகுத்து ஆச்சரியம் தந்திருக்கிறார் டெக்சாஸ் பல்கலைக்கழக கணினி அறிவியல்
மாணவர் ஜேம்ஸ்.
OLIVIA HADINOTO,
BROWN UNIVERSITY
இந்தோனேஷியா நாட்டில்
வேலையின்றி தவிக்கும் ஏழு மில்லியன் மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதே புரோயெக்
பின்டார்(Proyek
Pintar) திட்டத்தின் லட்சியம். நாட்டில் பத்து
சதவிகித மக்கள் நிம்மதியாக வாழ ஒலிவியா தன் தன்னார்வ திட்டத்தின் மூலம் உழைத்துவருகிறார்.
ROHAN PAVULURI,
HARVARD UNIVERSITY
ஏழைக் குடும்பங்களில்
முக்கியப்பிரச்னை.வீடு, மருத்துவம் ஆகியவற்றை சமாளிக்க வாங்கும் கடன்கள்தான்.
இத்தொகை இறுதியில் தொடர்புடையவர்களின் உயிரை அழித்துவிடுகிறது.
இதற்காக ஹார்வர்டு பல்கலையைச் சேர்ந்த ரோகன் பாவுலூரி திட்டத்தை உருவாக்கியுள்ளார்.
ALEXANDRIA RITCHIE,
VIRGINIA COMMONWEALTH UNIVERSITY
அறுவைசிகிச்சையில்
தண்டுவடத்தில் பயன்படுத்தும் மருத்துவ சாதனம் Durasafe. மயக்கமருந்து வல்லுநர்களுக்கு
உதவும் இச்சாதனத்தை அதிக சிக்கலின்றி பயன்படுத்தும் வகையில் உயிரிமருத்துவ மாணவி அலெக்ஸாண்ட்ரியா
உருவாக்கியுள்ளார்.
REBECCA DHARMAPALAN,
UNIVERSITY OF CALIFORNIA, BERKELEY
கலிஃபோர்னியாவின்
ஓக்லாந்தைச்சேர்ந ரெபெக்கா,
நம்பிக்கையூட்டும் திரைப்படைப்பாளி. அகதிகள்,
குழந்தைகளின் மீதான பாலியல் வல்லுறவு குறித்த ஆவணப்படங்களை உருவாக்கி
பாராட்டுக்களை அள்ளியுள்ளார்.
NIKHIL GARG,
UNIVERSITY OF NOTRE DAME
இணையத்தில் டிஜிட்டல்
முறையில் சொத்துக்களை வாங்க பயன்படுத்தும் Centralix இணையதளத்தை நிகில் உருவாக்கியுள்ளார்.
இவரின் தளத்தில் பல்வேறு கிரிப்டோகரன்சிகளை பயன்படுத்த முடியும்.