இடுகைகள்

இர்பான்கான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தன்னைதானே உணரவைக்கும் ஒரு நெடும் பயணம்! - கார்வான்

படம்
              கார்வான் துல்கர் சல்மான் பெங்களூருவில் வேலை செய்பவர் . புகைப்படம் எடுப்பதை தொழிலாக வைத்துக்கொள்ள நினைப்பவரின் எண்ணத்திற்கு அவரின் அப்பா சம்மதிப்பதில்லை . இதனால் வேண்டாவெறுப்பாக ஐடி கம்பெனி ஒன்றுக்கு வேலைக்கு சென்றுகொண்டிருக்கிறார் . அப்போது அவரின் அப்பா இறந்துவிட்டதாக தகவல் வருகிறது . அதனை கார்கோ நிறுவனம் ஒன்றில் அனுப்பி வைக்கிறார்கள் . ஆனால் அதில் ஒரு குழப்பம் ஏற்பட்டு விடுகிறது . துல்கரின் அப்பாவுக்கு பதிலாக கொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவரின் உடலை அனுப்பிவிடுகிறார்கள் . இவரின் அப்பா உடல் கொச்சிக்கு மாற்றி அனுப்பப்படுகிறது . இப்படி செல்லும்போது இவர்களிடம் உள்ள உடலுக்கு சொந்தக்காரரான தாஹிரா என்ற பெண்மணியின் மகள் , ஊட்டியில் உள்ள பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறாள் . அவளையும் அழைத்துச்செல்லும்படி நேருகிறது . இதன்படி வேன் ஓட்டுநரான சௌகத் , துல்கர் , தான்யா என மூவரின் பயணம் தொடங்குகிறது . இந்த மூவருக்கும் உள்ள ஒற்றுமை மூவருமே அப்பாவினால் பாதிக்கப்பட்டவர்கள் , ஒருவருக்கு அப்பா கொடுமைக்காரர் , இன்னொருவருக்கு புரியாத புதிர் , இன்னொருவருக்கு அப்பாவைப் பார்க்கவ