இடுகைகள்

தருண் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாலை விபத்தில் ஒருவரைக் கொன்றுவிட்டு குற்றவுணர்ச்சியில் தவிக்கும் நாயகன்!

படம்
      எலா செப்பனு - தருண், ஷிரியா       எலா செப்பனு தருண் , ஷிரியா சரண் ஜெர்மனி , இந்தியாவில் ஆந்திரம் என இரு நாடுகளில் பயணிக்கிற கதை . தற்செயலாக நடைபெறும் விபத்தால் நாயகி மணம் செய்துகொள்ளப்போகும் அவளது காதலன் இறந்துபோக , நாயகன் காதலனின் இழப்பை எப்படி ஈடுகட்டுகிறான் என்பதே கதை . இறந்துபோனவர் நடத்தும் தொழில் , குடும்பம் , சமூகம் என அனைத்து இடங்களிலும் தன்னை நாயகன் பொருத்திக்கொண்டு சாப விமோசனம் தேடுகிறார் . இந்த நேரத்தில் தன்னால் வாழ்க்கை இழந்த நாயகியையும் சந்தித்து , அடையாளம் மறைத்து அவரைத் தேற்றுகிறார் . தொழிலை மேலே மீட்டு கொண்டுவருகிறார் . இந்த நேரத்தில் அவர் மெல்ல நாயகியை காதலிக்கத் தொடங்குகிறார் . நாயகியும் அப்படித்தான் . இவர்களது காதல் ஒன்று சேர்ந்ததா , நாயகன் பற்றிய உண்மை நாயகிக்கு தெரிந்ததா , காவல்துறை அதிகாரி நாயகனின் தற்செயல் விபத்துக்காக அவரை கைது செய்தாரா இல்லையா என்பதே கதையின் இறுதிப்பகுதி . படத்தில் ஷிரியா சரணுக்கு நடிக்க நிறைய வாய்ப்பு உள்ளது . ஆனால் அவரோ எங்கோ பராக்கு பார்ப்பது போல நிற்கிறார் . ஒரு நிறுவனத்தை தனத...

பணக்காரப் பெண்ணை எப்படியேனும் கல்யாணம் செய்துவிட்டாலே வாழ்க்கை ஈஸி!

படம்
  அதிருஷ்டம் இயக்கம் சேகர் சூரி இசை தினா எம் ஏ   தத்துவம் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் நாயகன் ஒருநாள் ஜோதிடம் பார்க்கிறார். அதில், அவருக்கு கல்யாணம் நடந்தால் இப்போதிருக்கும் அரி பரியான அவதி வாழ்க்கை இருக்காது என கூறப்படுகிறது. ஆனால், வேலையில்லாமல் சுற்றும் நாயகனை யார் கல்யாணம் செய்துகொள்வார்கள்? இப்படியான நேரத்தில் நண்பனின் ஆலோசனை பேரில் இளவரசி சுயம்வரத்தில் கலந்துகொள்கிறார். அதற்குப் பிறகு அவரது வாழ்க்கை என்னவானது என்பதே கதை.   இயக்குநர், கடினமான காலகட்டத்தில் தனது வாழ்க்கையையொட்டி இந்த கதையை யோசித்து எழுதியிருப்பார் போல. நம்பிக்கை, காதல், நட்பு என எந்த விஷயமும் படத்தில் ஒட்டவில்லை. ரீமாசென்னை கவர்ச்சிப் பாடல்களுக்கென பயன்படுத்திவிட்டு தூக்கியெறிந்துவிடுகிறார்கள். நாயகி கஜாலாவுக்கான பங்கு படத்தில் மிகவும் குறைவு. நாயகன் பகிரங்கமாக அவருக்கு பலாத்கார முத்தம் கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபடுகிறார். அதைக்கூட அவர் தனது அழகுக்கான அங்கீகாரமாக ஏற்று அவரைக் காதலித்து மணம் செய்துகொள்கிறார்.   படத்தில் ஒரே சுவாரசியமான விஷயம், நாயகிக்கு பலாத்கார முத்தம் க...

பாசநேச நண்பர்களின் அடுத்த தலைமுறை வாரிசுகளின் காதல் கதை!

படம்
  நுவ்வு லேக்கா நேனு லேனு தெலுங்கு தருண், ஆர்த்தி அகர்வால் இயக்கம் காசி விஸ்வநாத் இசை ஆர் பி பட்நாயக்   இரண்டு பாசநேசமான நண்பர்கள். ஒன்று சேர்ந்து வணிகம் செய்கிறார்கள். அவர்களின் பிள்ளைகள் ராதாகிருஷ்ணன், கிருஷ்ணவேணி. இருவரும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இருவருக்குள்ளும் காதல் இருந்தாலும் அதை வெளிப்படுத்துவதில்லை. அதை வெளியே சொல்லும்போது கிருஷ்ணவேணிக்கு இன்னொருவருடன் கல்யாணம் நிச்சயமாகிறது இறுதியாக அவர்கள் காதல் வென்றதா, ஒன்றாக சேர்ந்தார்களா என்பதே கதை. ராதாகிருஷ்ணன், கிருஷ்ணவேணி என இருவரும் ஒன்றாக படிக்கிறார்கள். ஒருவரையொருவர் கிண்டல் செய்வதும், கேலி செய்வதுமாக இருக்கிறார்கள். ஆனால் ஒருவர் இல்லாமல் ஒருவர் இருக்க முடிவதில்லை. இதை கிருஷ்ணவேணியே முதலில் உணர்கிறாள். அவள்தான் தனது காதலை கூறுகிறாள். ராதாகிருஷ்ணனுக்கும் அவள் மீது காதல் இருக்கிறது. ஆனால் அதை அவன் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை. அப்படி தீவிரமாக எடுத்துக்கொள்ள நினைக்கும்போது குடும்ப வணிகத்தில் பிரச்னை ஆகிறது. இதில் அவர்களுக்கு ஒருவர் உதவுகிறார். அதன் காரணமாக நன்றிக்கடன் சிக்கல்கள் உருவாகிறது. தனத...