இடுகைகள்

திறமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திரைப்படத்துறையில் உள்ள பாலின பாகுபாடு, நிறவெறியை எதிர்த்துப் போராடும் கருப்பின நடிகை!

படம்
  taraji p henson தாராஜி, ஒரு சினிமா நடிகை. இவர் சமூக வலைத்தளங்களில் தனது உடல் நளினத்தை காட்டும் புகைப்படங்களை பதிவிட்டுவிட்டு சொந்த வேலைகளைப் பார்க்க செல்பவரல்ல. ரசிகர்களை சொந்த சுயநலத்திற்கு பயன்படுத்திக்கொள்பவரும் அல்ல. கருப்பினத்தவரான தாராஜி, தன்னைச் சார்ந்த இனக்குழுவினர் ஊடகங்களில், திரைப்படங்களில் பாகுபாடுடன், பாலியல் பிரச்னைகளோடு இருப்பதை வெளிப்படையாக உலகிற்கு கூறியவர். ஒருமுறை நேர்காணலில், தனது அனுபவம், திறமைக்கு ஏற்ற ஊதியத்தை கருப்பின பெண் என்பதற்காக தயாரிப்பாளர்கள் தருவதில்லை என்று வெளிப்படையாக கூறினார். அவர் கூறியபோது அந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. டிவி சேனல், திரைப்படம் என இரண்டிலும் தனது திறமையை வெளிக்காட்டி ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் தாராஜி.  தி குயூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன் என்ற படத்தில் பிராட் ஃபிட்டிற்கு போட்டி கொடுத்து நடித்தவர் தாராஜி. அதற்கு பிராட் பிட் பல மில்லியனில் சம்பளம் பெற்றபோது, தாராஜி பெற்றது 72 ஆயிரம் டாலர்கள் மட்டுமே. இன்றுமே கருப்பின பெண்கள், வெள்ளை இனத்தவர் பெறும் சம்பளத்தில் எழுபது சதவீதம்தான் பெறுகிறார்கள். இதற்கு பாலினம், நிறம் முக்கிய

வசை, அவதூறு, சதி, துரோகங்களைக் கடந்து வெல்லும் தற்காப்புக் கலை தலைவனின் நெகிழ்ச்சியான கதை!

படம்
  கிங் ஆஃப் மார்ஷியல் ஆர்ட்ஸ்  காமிக்ஸ் 380 அத்தியாயங்கள்..... நிறைவடையவில்லை ரீட்மங்காபேட்.காம் யேசென் என்பவன், ஸென்குயு இனக்குழுவைச் சேர்ந்தவன். தற்காப்புக்கலையில் சிறந்தவனாக இருப்பவனை அங்குள்ள சிலர் சதி செய்து அவன் தற்காப்புக்கலையை அழிக்கிறார்கள். மேலும் அவனை இனக்குழுவில் இருந்து நீக்குகிறார்கள். அவனது காதலிக்கு சுவாங்க்லிங் எனும் அழிவற்ற உடல் இருப்பது தெரிய வருகிறது. இதனால் அவளும் அவனை ஊதாசீனப்படுத்துகிறாள். காதலை கைவிடுகிறாள். அவனை அவமானப்படுத்த காத்திருந்தவர்கள் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவனுக்கு பெற்றோரோ, உதவி செய்ய எந்த ஆதரவான சக்தியும் இல்லாத சூழ்நிலையில் காட்டு வழியே நடந்துசெல்கிறான். அப்போதுதான் விண்ணிலிருந்து விண்கல் ஒன்று காட்டில் வந்து விழுகிறது. அதிலிருந்து நெருப்பு அணையாமல் எரிகிறது. அவன் அதன் அருகில் சென்று நின்று, நெருப்பு ஜூவாலையைத் தொட்டு பார்க்க, அந்த நெருப்பு அப்படியே அவனது உடலுக்குள் புகுந்து இழந்த தற்காப்புக்கலையை மீண்டும் கற்கும் தன்மைக்கு உடலை மாற்றுகிறது. அந்த சக்தி ஏற்படுத்தும் அதிர்ச்சியால் மயக்குறுபவனை வயதானவர், அவரது பேரன் ஆகியோர் காப

கட்டுமானத்துறையில் பெண்களை நிலைநிறுத்தும் கேர்ள்ஸ் காரேஜ்!

படம்
  பெண்கள் உருவாக்கும் கட்டிடங்கள் - கேர்ள்ஸ் காரேஜ் கட்டுமானத்துறையைப் பொறுத்தவரை பெண்கள் அதில் அலுவலகத்தில் வடிவமைப்பு சார்ந்து செயல்படுபவர்களாக இருப்பார்கள். நேரடியாக கட்டுமான உருவாக்கத்தில் பங்கு பெறுபவர்களாக இருப்பது இல்லை. இதற்கு பாலின பாகுபாடு, பெண் கட்டுமான கலைஞர்கள் மீது நம்பிக்கை இல்லாதது. கூட காரணமாக இருக்கலாம். இதை கேர்ள்ஸ் காரேஜ் என்ற தன்னார்வ லாபநோக்கற்ற அமைப்பின் தலைவரான எமிலி பில்லோடன் லாம் மாற்றிவருகிறார்.  யசி பெர்க்லியில் கட்டுமான கலை படிப்பை முடித்தவர், சிகாகோவில் உள்ள கலைப்பள்ளியில் பட்டம்பெற்றுள்ளார். தொடக்கத்தில் ஹெச் டிசைன் என்ற பெயரில் கட்டுமான நிறுவனத்தை தொடங்கினார். அதாவது, 2008ஆம் ஆண்டு ஆண்டு. பிறகு, 2013ஆம்ஆண்டு அதன் பெயரை கேர்ள்ஸ் காரேஜ் என பெயர் மாற்றி, கட்டுமான பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு குறைந்த தொகை அல்லது இலவசம் என்ற வகையில் வேலை கொடுத்து கட்டுமானங்களை உருவாக்கத் தொடங்கினார். அமெரிக்காவில் கட்டுமானத்துறையில் 3.4 சதவீத பெண்கள்தான் பணியாற்றுகிறார்கள். இந்த சூழலில் எமிலி, தனது நிறுவனம் முழுக்க பெண்களை மட்டுமே மையமாக வைத்து இயங்குகிறார். ''&#

தனித்துவமான பாத்திரங்களின் இயல்பை பேசும் மின்னூல்! - What an idea sirji

படம்
  பொதுவாக மசாலா படங்களில் பரிசோதனை முயற்சிகளை நிறைய இயக்குநர்கள் செய்ய மாட்டார்கள். ஆனால் இன்று வரும் புதிய இயக்குநர்கள் அதையும் ஒரு கை பார்க்கிறார்கள். இன்று தியேட்டரில் வெளியாகும் படம் கடந்து ஓடிடி என்பது தனி ஒரு வணிகமாக மாறிவருகிறது.  வணிகப் படங்களில் தனித்துவமான பாத்திரங்களை நெருக்கடிகளுக்கு பணியாமல் உருவாக்கி வெற்றி பெற வைப்பது கடினம். அப்படியான சில பாத்திரங்களை மட்டுமே இந்த நூல் பேசுகிறது.  படம் வெற்றி பெற்றாலும் தோல்வியுற்றாலும் கூட சில பாத்திரங்களை நாம் மறக்கவே முடியாது. சினிமா என்பது நம் ரத்தத்தோடு கலந்த ஒன்றாக மாறி வெகு காலமாகிறது. அப்படியான சில மசாலா படங்களில் பாத்திரங்களைப் பற்றி பேசி அதன் உளவியலை ஆராய்வதே நூலின் நோக்கம். நூலின் அனைத்து படங்களும், பாத்திரங்களும் மகத்தானவை என்று கூறமுடியாது. எனது மனதிற்கு வித்தியாசமான பாத்திரங்கள் என்று தோன்றியவற்றை எழுதியிருக்கிறேன். உங்களுக்குப் பிடித்தால் நூலை தரவிறக்கி வாசியுங்கள். நன்றி! லாய்ட்டர் லூன் நூலைப் பெற... https://www.amazon.in/dp/B0C8MQP59X

கிராமத்திலுள்ளவர்களை திறமைசாலிகளாக உருவாக்கி வருகிறோம்! - ஶ்ரீதர் வேம்பு, ஜோகோ

படம்
            ஶ்ரீதர்வேம்பு ஜோகோ கிராமத்தில் நிறுவனத்தை தொடங்கி நடத்தும்போது எது சரியாக இருக்கும் , எது வேலைக்கு ஆகாது என நினைக்கிறீர்கள் ? பைபர் ஆப்டிக் வயர்கள் இணையத்தை இணைப்பதால் வீடியோ தரம் சிறப்பாக உள்ளது . அதேசமயம் ஆங்கிலம் சிறப்பாக பேசும் ஆட்களை கிராமத்தில் தேடிப்பிடிப்பது கடினமாக உள்ளது . நிறைய ஜெர்மன் , ஜப்பானிய நிறுவனங்கள் எப்படி ஆங்கிலம் இல்லாமல் கூட உலக சந்தையை அணுகுகிறார்களோ அதேவழியில் நாமும் இந்திய தொழில்வளத்தை உயர்த்தவேண்டும் .    ஸ்டார்ட்அப் என்றாலே நிறைய போட்டிகள் உள்ளன . ஒப்பீடுகள் வருகின்றன . எப்படி சமாளிக்கிறீர்கள் ? நான் நேற்று கூட என் கிராமத்தினருடன் சேர்ந்து 12 கி . மீ . தூரம் நடந்து சென்றேன் . இப்போது என்னை பில்கேட்ஸூடன் ஒப்பிடுவீர்களா ? இந்த எலிப்பந்தயம் மீது எனக்கு விருப்பமில்லை . உங்களுக்கு மிகப்பெரும் ஆதாயம் தரும் விஷயம் இதிலிருந்து நீங்கள் விலகி வாழ்வதுதான் . உங்களுக்கு அரசியலில் சேரும் எண்ணம் உண்டா ? நான் அடுத்த பத்தாண்டுகளுக்கு அரசியலில் ஈடுபடவேண்டும் என்ற நினைக்கவில்லை . ஜோகோவில் செய்யவேண்டிய பணிகள் நிறைய உள்ளன . இதற

வேலை வாய்ப்புச் சந்தை மாறி வருகிறது - நீங்களும் மாறுங்கள்!

படம்
வேலைவாய்ப்புச்சந்தைகள் இப்போது மாறிவருகின்றன. முதலில் லிங்க்டு இன்னில் புரபைல் பதிந்து வேலை தேடியவர்கள் இன்று காணாமல் போய்விட்டார்கள்.இன்று நொடியில் வேலைக்கு தகுதியானவர்களா இல்லையா என அறிய டிண்டர் ஆப்பை போலவே புதிய ஆப்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இப்படி பல ஆப்கள் உள்ளன. இனிமேலும் நீங்கள் நாக்ரி.காமில் பதிந்து வைத்தேனே அதெல்லாம் வீணா என்றால் வாழ்க்கை மொத்தமும் வீணாகிவிடும். ஆட்டோமேஷன் உலகில் கிடைக்கும் வேலை எவ்வளவு முக்கியம் தெரியுமா?   ஜாப்பர், பிளாங்க். ஸ்விட்ச், வேவ், ஷேப்பர் எனும் ஆப்களை இன்று மனிதவளத்துறையினர் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அதனால் இனி சிபாரிசுகளை விட உங்களுக்கு தகுதிதான் முக்கியமாகப் போகிறது. டிண்டர் என்பது ஜாலியான டேட்டிங் ஆப். அதற்கும் வேலைக்கும் வித்தியாசம் இல்லையா என சிலர் கேட்கலாம். உண்மைதான் டெக் ஆட்கள் புரிந்துகொண்டது அதன் இடைமுக எளிமைத்தன்மையை மட்டுமே. எளிமையாக சில கம்பெனிகளைப் பார்க்கலாம். உங்களுக்கு பிடித்திருந்தால் அதனை ஸ்வைப் செய்து அந்த நிறுவன ஹெச் ஆர் ஆட்களிடம் ஆப் லைனில் பேசலாம். அவர்கள் தேடிய ஆட்களில் நீங்களும் ஒருவர் என நம்பிக்கை தோன்ற

இந்தியர்களுக்கு டிஜிட்டல் யுகத்திலும் வேலைவாய்ப்புகள் இருக்கிறது!

படம்
ஆனந்த் கோபால் மகிந்திரா...இன்று ட்விட்டரில் யார் இருக்கிறார்களோ இல்லையோ. இந்தியா மற்றும் உலகில் நடைபெறும் அனைத்து விஷயங்களையும் ஆனந்த் கவனிக்கிறார். நிறுவன முதலாளிக்கு இதற்கெல்லாம் நேரமிருக்கிறதா என்று கேட்கிறீர்கள். ஆனால் அதற்கும் அவர் பதில் வைத்திருக்கிறார். உங்களுடைய நிறுவனத்தில் எந்த பதவி எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இருக்கும்? சீஃப் பீப்பிள் ஆபீசர் என்ற பதவிதான். அல்லது சீஃப் கவர்னன்ஸ் ஆபீசர் என்ற பதவி. காரணம், இன்று நிறுவனம் உலகளவில் உயர அந்நிறுவனத்தின் மதிப்பு, பிராண் ட் முக்கியம். என் வாழ்க்கையில் நான் ஃபெராரி கார் வாங்குவேன். அதுதான் என லட்சியம் என்று ஒருவர் சொன்னால், அவர் எப்படி நேர் வழியில் பயணிப்பார். அப்படி ஒருவர் நிறுவன அதிகாரி என்ற முறையில் தேர்ந்தெடுத்தால் நிறுவனத்தின் மதிப்பு என்னாகும்? நோக்கம் என்னாகும்? சொல்லுங்கள் 20.7 பில்லியன் டாலர்களைக் கொண்ட நிறுவனத்தின் இயக்குநர் நீங்கள். ஆனால் உங்களை வேறெங்கும் பார்ப்பதைவிட ட்விட்டரில் பார்க்க முடிகிறதே? நான் சில ஆண்டுகளுக்கு முன்பு மைக்ரோசாப்ட் மற்றும் சில மென்பொருள் நிறுவனங்களிடம், அனைத்து நிறுவனங்களையும்

நல்ல குணம் என்ன செய்யும்?

படம்
http://balamurugan1977.tumblr.com நல்ல குணம் தேவையா? திறமை உங்களை உயரே கொண்டு செல்லும். ஆனால் நற்குணம்தான் உங்களை அங்கே அமர வைக்கும். சுவடுகள் அடுத்தவர்களின் அடிச்சுவட்டிலேயே நடந்துகொண்டு இருந்தால், உங்கள் அடிச்சுவடுகளை ஒருநாளும் பதிக்க முடியாது. அனைவருக்கும் ஃப்ரெண்டு அனைவருக்கும் நண்பனாக இருப்பவன், ஒருவருக்கும் உண்மையான நண்பனாக இருக்க மாட்டான். நன்றி: ஆனந்த விகடன்